(2989)

அருகலி லாய பெருஞ்சர் அமரர்கள் ஆதி முதல்வன்,

கருகிய நீலநன் மேனி வண்ணன்செந தாமரைக் கண்ணன்,

பொருசிறைப்புள்ளுவந்தேறும் பூமகளார்தனிக்கேள்வன்,

ஒருகதியின்சுவைதந்திட் டொழிவிலனென்னோடுடனே.

 

பதவுரை

அருகல் இல் ஆய

-

ஒருநாளும் குறைபடுதலை உடையதல்லாத

பெருசீர்

-

சிறந்த திருக்குணங்களையுடையவனும்

அமரர்கள்

-

நித்யஸூரிகளுக்கு

ஆதி முதல்வன்

-

தலைவனும்

கருகிய நீலம் நல்மேனிவண்ணன்

-

கறுத்த நீலமணிபோல் விலக்ஷணாமன திருமேனி நிறத்தையுடையவனும்

செம் தாமரை கண்ணன்

-

செந்தாமரை மலர் போன்ற திருக்கண்களையுடையவனும்

பொரு சிறை புள்

-

செறிந்த சிறகையுடைய பெரிய திருவடியை

உவத்து ஏறும்

-

விரும்பி வாஹனமாகக் கொள்பவனும்

பூமகளார் தனி கேள்வன்

-

பெரிய பிராட்டியார்க்கு ஒப்பற்ற நாதனுமான எம்பெருமான்

என்னோடுடனே

-

என்னோடேகூடி நின்று

ஒரு கதியின் சுவை தந்திட்டு ஒழிவிலன்

-

ஒரு வழியாலுள்ள இனிமையைத் தந்து தவிருகிறானில்லை (ஸகலவித அநுபவங்களையும் தருகின்றானென்றபடி).

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- பெரியதிருவடி திருவன்நதாழ்வான் பிராட்டிமார் முதலானோர் ஓரொரு வகைகளாலே தன்னோடு ஸம்ச்லேஷரஸம் பெருமாபோலல்லாமல் எல்லா வகைகளிலுமுள்ள ஸம்ச்லேஷஸங்களையும் நான் பெறும்படி எனக்குத் தந்து என்னை ஒருகாலும் விடாதபடி யானான் எம்பெருமானென்கிறார்.

அருகல்- குறைதல், அது இல்லாத எனவே, நித்யமான என்றபடி, அன்றிசேடில்லாமையைச் சொல்லிற்றாய் குணங்களத்தனையும் கல்யாணமாயிருக்கின்றவென்றபடியுமாம். ஹேய ப்ரத்யநீக கல்யாண மஹாகுணங்களையுடையனாய், அந்தக் குணங்களின் அநுபவமே யாத்திரையான நித்யஸூரிகளுக்குத் தலைவனாய் கறுத்து நெய்த்து விலக்ஷணமான திருமேனி நிறத்தையுடையனாய், திருவுள்ளத்தினுள்ளேயுள்ள தண்ணளிக்கு ஸூசகமாயிருக்குந் திருக்கண்களையுடையனாய், ஸந்தோஷ மிகுதியினால் பதறாநின்றுள்ள சிறகையுடைய பெரிய திருவடியின்மீது உவந்து ஏறுமவனாய், கமலைகேள்வனான எம்பெருமான் எனக்கு ஏதோ வொருவகையான ரஸாநுபவத்தை மாத்திரம் தந்துவிடாமல் நித்யஸூரிகளெல்லார்க்கும் தனித்தனியே தந்தருளும் அநுபவங்களையெல்லாம் என்னொருவனுக்குத் தந்தருளி வேறு எங்கும் போக்கற்றவனாய் “நித்யஸூரிகளையெல்லாம் என்னொருவனுக்குத் தந்தருளி வேறு எங்கும் போக்கற்றவனாய் “நித்யவிபூதியை நிர்வஹிப்பதும் இங்கேயிருந்து கொண்டே போலும்” என்னும்படி என்னை ஒரு நொடிப்பொழுதும் விடுகிறானில்லையென்றாராயிற்று.

அருகவிலாய பெருஞ்சீர் என்பதனால் சொல்லப்பட்ட அகிலஹேயப்ரத்யநீக கல்யாணைக தாநமான ஸ்வரூப வைலக்ஷண்யமென்ன, அமரர்களாதிமுதல்வன் என்பதனால் சொல்லப்பட்ட நித்யஸூரி நிர்வாஹகத்வமென்ன, கருகியநீல நன்மேனிவண்ணன் என்பதனால் சொல்லப்பட்ட புண்டரீகாக்ஷத்வமென்ன, பொருநிறைப் புள்ளவந்தேறும் என்பதனால் சொல்லப்பட்ட கருவாஹநத்வமென்ன, பூமகளார்தனிக்கேள்வன் என்பதனால் சொல்லப்பட்ட ச்ரிய; பதித்வமென்ன ஆகிய இந்த அறு சுவையுந் தாராநின்றானென்று உட்கருத்துணர்க.

 

English Translation

Faultless Lord of infinite glory, first cause of the celestials, dark gem-hued Lord of lotus-red eyes, peerless spouse of Lakshmi, -he delights in riding the Garuda bird of fierce wings.  He has entered into me, giving me the bliss of union!

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain