(2988)

சூழல் பலபல வல்லான் தொல்லையங் காலத் துலகை

கேழலொன் றாகியி டந்த கேசவ னென்னுடை யம்மான்,

வேழ மருப்பையொ சித்தான் விண்ணவர்க் கெண்ணல் அரியான்

ஆழ நெடுங்கடல் சேர்ந்தான் அவனென னருகலி லானே.

 

பதவுரை

பலபல சூழல் வல்லான்

-

மிகப்பல அவதாரங்கள் செய்ய வல்லவனும்

தொல்லையம் காலத்து

-

முன்பொரு காலத்திலே

கேசவன்

-

கேசவனென்னும் திருநாமமுடையவனும்

வேழம்

-

(குவலாயபீட மென்னும்) யானையினுடைய

கேசவன்

-

கேசவனென்னும் திருநாமமுடையவனும்

வேழம்

-

(குவலாயபீடமென்னும்) யானையினுடைய

மருப்பை

-

கொம்புகளை

ஒசித்தான்

-

ஒடித்து அவ்யானையை முடித்தவனும்

விண்ணவர்க்கு

-

தேவர்களுக்கு

எண்ணல் அரியான்

-

நினைத்ததற்கும் அருமையானவனும்

உலகை

-

பூமியை

கேழல் ஒன்று ஆகி

-

ஒப்பற்ற வராஹ ரூபியாகி

இடந்த குத்தியெடுத்துவந்தவனும்

 

ஆழம்

-

ஆழமாகிய

நெடுகடல்

-

நீண்ட ஸமுத்ரத்திலே

சேர்ந்தான்

-

திருக்கண்வளர்ந்தருள்பவனுமான

என்னுடை அம்மாம் அவன்

-

அவ்வெம்பெருமான்

என் அருகலிலான்

-

என்னருகிலுள்ளான்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கீழ்ப்பாட்டிற் கூறியபடி பரிஸரத்திலே வந்து இருந்த நிலை ஸாத்மித்தவாறே என்னருகே வந்து நின்றானென்கிறார். சூழல் என்னுஞ் சொல் கீழ்பாட்டில் சுற்றுப்பிரதேசம் என்ற பொருளில் வந்தது; சூழ்த்துக்கொள்வதற்காகச் செய்த காரியம் (அதாவது) ஸம்ஸாரிகளை அகப்படுத்திக் கொள்வதற்காகச் செய்தது என்ற காரணத்தினால் இச் சொல் அவதாரத்தைக் குறிக்குமென்க. “எந்நின்ற யோனியுமாய்ப் பிறந்தாய்” என்றபடி எம்பெருமான் எண்ணிறந்த யோனிகளில் திருவவதாரங்கள் செய்தமையால் “ழேல் பலபல வல்லான்” என்றார். நாமும் பல பிறவிகள் பிறக்கிறோமானாலும் கருமங்காரணமாகப் பிறக்கின்றோம்; எம்பெருமான் கருணை காரணமாகப் பிறக்கின்றானாதலாலும், நரஸிம்ஹம்போலே சேராச் சேர்த்தியான அவதாரங்களையும் எடுக்கின்றானாதலாலும் வல்லான் என்றது.

அப்படி அவன் செய்தருளின அவதாரங்களில் ஓரவதாரத்தை யநுபவிக்கிறார் கேழலொன்றாகி யென்று. ஹிரண்யகசிபுவின் உடன்பிறந்தவனான ஹிரண்யாக்ஷனென்னுங் கொடிய அசுரன் தன் வலிமையாற் பூமியைப் பாயாகச் சுருட்டியெடுத்துக்கொண்டு கடலில் மூழ்கிச் சென்றபோது தேவர் முனிவர் முதலியோரது வேண்டுகோளினால் திருமால் மஹா வராஹரூபியாகத் திருவவதரித்துக் கடலினுட்புக்கு அவ்வரசுரனை நாடிக் கண்டு பொருது கோட்டினாற் குத்திக்கொன்று பாதாளலோகத்திற் சார்ந்திருந்த பூமியைக் கோட்டினாற் குத்தி அங்கு நின்று எடுத்துக்கொண்டுவந்து பழையபடி விரிந்தருளின னென்ற வராஹாவதாக வரலாறு அறியத்தக்கது. இப்பொழுது நடக்கிற ச்வேத வராஹகல்பத்துக்கு முந்தின பாத்மா கல்பத்தைப் பற்றிய பிரளயத்தின் இறுதியில் ஸ்ரீமந் நாராயணன் ஏகார்ணவாமன பிரள ஜலத்தில் முழுகியிருந்த பூமியை மேலேயெடுக்க நினைத்து மஹா வராஹரீபியாகிக் கோட்டு நுனியாற் பூமியை எடுத்து வந்தன னென்ற வரலாறும் உண்டு. “பாராருலகம் முதுமுந்நீர் பரந்த காலம் வளைமருப்பில், ஏராருருவத் தேனமாய் எடுத்தவாற்றலம்மான்” (பெரிய திருமொழி 8-8-3) என்ற திருமங்கையாழ்வாரருளிச்செயல் காணத்தக்கது.

 

English Translation

My Lord kesava is the Lord of many wonders, He killed the rutted elephant; he came as a boar and lifted the Earth, he reclines in the deep ocean mystifying celestials.  He is near me now.

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain