(2986)

நீர்புரை வண்ணன், சீர்ச்சடகோபன்,

நெர்த லாயிரத்து, ஓர்தலிவையே.

 

பதவுரை

நீர்புரை வண்ணன்

-

நீரையொத்த நிறத்தையுடைவனான ஸர்வேச்வரனுடைய

சீர்

-

ருஜுத்வமென்னுங் குணத்தைக் குறித்து

சடகோபன்

-

நம்மாழ்வார்

நேர்தல்

-

நேர்ந்து அருளிச்செய்த

இவை

-

இப்பத்துப்பாட்டும்

ஆயிரத்து

-

ஆயிரத்தினுள்

ஓர்தல்

-

ஆராய்ந்து அறியத்தக்கன.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- இந்தத் திருவாய்மொழி மற்ற திருவாய்மொழிகளினும் ஆராய்ந்து சொல்லப்பட்டதென்கிறார். ‘நீர் புரைவண்ணன் சீர்’ என்றதனால் இத்திருவாய்மொழிக்கு ப்ரமேயம் ருஜுத்வகுணம் என்பது பெறப்படும். நீரின் ஸ்வபாவம்போன்ற ஸ்வபாவத்தையுடைய எம்பெருமானுடைய குணம் எனவே ஆர்ஜவகுணம் என்பது எங்ஙனே தெரியலாகும் என்னில்; நீர்வெள்ளத்தை நாம் எப்படியிழுத்தாலும் அப்படியெல்லாம் அது ஓடிவரும்; அதுபோலே எம்பெருமான் யார்க்கும் உடன்பட்டு வருவன் என்க.

“நீர்புரைவண்ணன்சீர்” என்ற இவ்விடத்து ஒன் தினாயிரப்படியில் “உபாயஜ்ஞர்க்கு நினைத்தவிடத்திலே கொடு போகலான நீரின் தன்மையையுடையவனுடைய குணத்தை’ என்றருளிச் செய்தது காண்க.

இத்திருவாய்மொழியை ஓதுதற்குப் பலன் யாதொன்றுங் கூறப்படாமையினால் இதனை ஓதுதல் தானே ஸ்வயம் ப்ரயோஜனம் என்பது விளங்கும்.

 

English Translation

This decad by satakopan, in the thousand sons, sings the glories of the ocean-hued Lord.

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain