(2985)

நாதன்ஞாலங்கொள்  பாதன்,என்னம்மான்,

ஓதம் போல்கிளர், வேதநீரனே.

 

பதவுரை

நாதன்

-

ஸகலலோகநாதனும்

ஞாலம் கொள்பாதன்

-

உலகத்தையெல்லாம் அளந்துகொண்ட திருவடிகளையுடையனுமான

எம் அம்மான்

-

எம்பெருமான்

ஓதம் போல்கிளர்

-

கடல்போல முழங்குகின்ற

வேதம்

-

வேதங்களால் அறியத்தக்க

நீரன்

-

நீர்மையையுடையான்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- இப்படி எனக்காக எண்ணிறந்த திருவவதாரங்களைப் பண்ணியருளின இவருடைய ஆச்ரித வாத்ஸல்யத்தைப் பேசவேண்டில், நானோ பேசுவது? கடலோதங்ளர்த்தாப்போலே கிளர்ந்துள்ள வேதங்களே யன்றோ பேசவேண்டுமென்கிறார், எல்லார்க்கும் சேஷியாய், வஸிஸ்ட சண்டான விபாகமின்றியே எல்லார் தலைகளிலும் திருவடிகளைப் பரப்பினவனான ஸர்வேச்வரன், கடல்போலே கிளர்ந்து ஸ்தோத்திரம் பண்ணுகின்ற வேதங்களாலே பேசப்பட்ட நீர்மையையுடையவன்.

நீர்மையையுடையவன்- நீரன்.

 

English Translation

My Lord and master who measured the Earth is praised by the Vedas, like waves of the ocean.

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain