(2984)

சங்கு சக்கரம், அங்கையில் கொண்டான்,

எங்கும் தானாய, நங்கள் நாதனே.

 

பதவுரை

எங்கும்

-

எவ்விடத்தும்

தானி ஆய

-

(அவதாரமுகத்தால்) தானே வியாபித்த

நங்கள் நாதன்

-

எம்பெருமான்

அம் கையில்

-

அழகிய திருக்கைகளில்

சங்கு சக்கரம்

-

திருவாழி திருச்சங்குகளை

கொண்டான்

-

தரித்துள்ளான்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- இப்படி எனக்காக ஸகல யோனிகளிலும் வந்து பிறந்தருளுகிறவன் தனது திருக்கைகளில் அழகிய திருவாழியும் திருச்சங்கும் ஏந்தி அவ்வழகோடுகூட வந்து பிறப்பவனென்கிறார். சிலரை வசப்படுத்திக்கொள்ள நினைத்தவர்கள் கையிலே மருந்தை வைத்துக்கொண்டு திரியுமாபோலே அவதாரங்கள் தோறும் திவ்யாயுதங்களோடே வந்து அவகரிப்பனாம் . எல்லா அவதாரங்களிலும் திவ்யாயுதங்கள் உண்டோவென்னில்; எங்கு முண்டு; உகவாதார் கண்ணுக்கு தோற்றாது, உகந்தார் கண்ணுக்குத் தோற்றும்.

இங்கே நம்பிள்ளையீடு:- “ராஜாக்கள் கறுப்புடுத்துப் புறப்பட்டால் அந்தரங்கா அபேக்ஷித தசையிலே முகங்காட்டுகைக்காகப் பிரியத்திரிவர்கள்; அதுபோலே தோற்றாதேயும் நிற்பர்கள்.” என்று (அதாவது) ராஜாக்கள் நகரசோதனைக்காக ஒருவர்க்குந் தெரியாதபடி நீலவஸ்திர முடுத்துக்கொண்டு இருளோடேயிருளாகத் திரிவர்கள்; அப்போது அந்தரங்கர்களாகவுள்ளவர்களும் கூடவே வந்து திரிவர்கள் ஆனால் அவர்கள் கூடவே யிருக்கமாட்டார்கள்; கூப்பிட்ட குரலுக்கு ஏனென்று வந்து அணுகி நிற்கும்படியாக எங்கேனும் மறைந்து திரிவர்கள்; அதுபோலே திருவாழி திருச்சங்கு முதலான அந்தரர்களும் எம்பெருமானுடைய எந்த அவதாரத்திலும் மறைந்து கூடனிருப்பர்களென்றவாறு.

“எங்குந் தானாய்” என்பதற்கு இரண்டுவகையாகப் பொருள் கூறுவர் (1) தேவயோனி மனுஷ்யயோனி முதலிய எந்நின்ற யோனிகளிலும் வந்து திருவவதரிக்கின்ற (2) ஒருவனைப் பிடிக்க வேண்டி ஊரை வளைவாரைப்போல தம்மை விஷயீகரிப்பதற்காக எங்கும் வியாபித்து ஸர்வாந்தர்யாமியாயிருப்பவன்.

 

English Translation

Our Lord who appeared in all forms bears a discus and conch on beautiful hands.

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain