(2983)

ஆனா னானாயன், மீனோ டேனமும்,

தானா னானென்னில், தானா யசங்கே.

 

பதவுரை

ஆன் ஆயன் ஆனான்

-

பசுமேற்கும் இடையனானான்

மீனோடு எனமும் தான் ஆனான்

-

மத்ஸ்யாவதாரமும் வராஹாவதாரமும் முதலான அவதாரங்களைத் தானே செய்தான்.

என்னில்

-

என்னுமிடத்து

தான் ஆய

-

தானெடுத்த அவதாரங்கள்

சங்கே

-

சங்கமென்னும் கணக்கையுடையனவே. (அபாரமென்றபடி)

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- என்னை யகப்படுத்திக்கொள்வதற்காகவே எம்பெருமான் பல திருவவதாரங்கள் செய்தான்; அங்ஙனஞ் செய்த அவதாரங்களுக்கு ஓர் எல்லையில்லை யென்கிறார்; ‘என்னில் தானாய சங்கே’ என்பதற்கு இரண்டு வகையாகப் பொருள் அருளிச்செய்வர்; பதவுரையில் காட்டின பொருள் ஒன்று; மற்றொன்று-; என்னில்- என்னிடத்தில், தான் ஆய- தனக்குண்டான, சங்கு- ஸங்கத்தினாலே, (அதாவது) ஆசையினாலே அயனானான். மீனோடு ஏனமும் தானானான் என்பதாக. இங்கு ஆறாயிரப்படி காணமின்- “தன்னுடைய திவ்யசேஷ்டிதமாத்ரமேயோ எனக்கு போக்யமாகச் செய்தருளிற்று; தன்னுடைய திவ்யசேஹ்டிதமாத்ரமேயோ எனக்கு போய்கமாகச் செய்தருளிற்று; தன்னுடைய திவ்யாவதாரங்களுமெல்லாம் என்பக்கலுள்ள ஸங்கத்தாலே எனக்கு போய்கமாகச் செய்தருளினானென்கிறார்” என்று.

ஸங்க; என்னும் வடசொல்லும் சங்கு எனத் திரியும்; சங்க என்னும் வடசொல்லும் சங்கு எனத்திரியும். பதவுரையிற்படி பொருள்கொண்டால், சங்கு என்பது லக்ஷம், கோடி போலே ஒரு மிகப்பெரிய எண்ணுக்குப் பெயர்.

 

English Translation

For the love of me, he become the cowherd, and the fish, and the boar too.

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter



 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain