(2982)

கொண்டா னேழ்வி டை, உண்டா னேழ்வையம்,

தண்டா மஞ்செய்து, என்  எண்டா னானானே.

 

பதவுரை

ஏழ்விடை

-

ஏழு விருதுகளையும்

கொண்டான்

-

(நப்பின்னைக்காக) வலியடக்கினவனும்

ஏழ் வையம்

-

ஏழுலகங்களையும்

உண்டான்

-

(பிரளங்கொள்ளாதபடி) திருவயிற்றிலே வைத்தவனுமான எம்பெருமான்

தண் தாமம்

-

குளிர்ந்த பரமபதத்திற்கொப்பாக என்னைத் திருவுள்ளம்பற்றி

என் எண்தான் ஆனான்

-

நான் எண்ணின எண்ணத்திற்குப் பிரதியாகத்தான் சில எண்ணங்கள் கொண்டான்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- நப்பின்னைப் பிராட்டியோடு ஸம்ச்லேஷிப்பதற்காக அதற்கிடையூறாயிருந்த ஏழெருதுகளை வலியடக்கினாப்போலே என்னோடு கலவிசெய்ய விரும்பி என்னுடைய பாபம் முதலிய பிரதிபந்தமங்களைப் போக்கியருளினானென்பது முதலடியின் கருத்து. பிரளயங்கொள்ளப்புகுந்த பூமண்டலத்தைத் தனது திருவயிற்றிலே வைத்து ரக்ஷியாவிடின் தனக்குத் தரிக்கவொண்ணாமேயிருந்ததுபோலே என்னைத் தன்னுள்ளே ஒரு நீராக்கிக் கொள்ளாவிடில் தனக்குத்தரிப்பில்லையென்னலாம்படியிருந்தானென்பது இரண்டாமடியின் கருத்து. பரமபதத்திற் பண்ணும் விருப்பத்தை என் பக்கலிலே பண்ணினானென்பது மூன்றாமடியின் கருத்து

என் ஆண் தான் ஆனான் = அவன் விஷயத்திலே நான் எண்ணின எண்ணத்தை அவன் என் விஷயத்தில் எண்ணினான் என்றபடி. அதாவது - ‘பரமபதத்திற்குச் செல்லவேணும்’ விரஜையாற்றிலே முழுகவேணும் அங்கே ஸாமகானம்பண்ணி அவனை யநுபவிக்கவேணும், என்றிப்படியெல்லாம் நான் பாரித்துக்கொண்டிருக்க, ‘திருக்குருகூர்க்குச் செல்லவேணும், தாமிரபர்ணியிலே நீராடவேணும், கண்ணுநுண் சிறுத்தாம்பு பாடி ஆழ்வாரை அநுபவிக்கவேணும்’ என்று அவன்றான் பாரித்துக்கொண்டு இங்கேற ஓடிவந்தான் என்றவாறு.

‘நான் எண்ணினபடியே எனக்குக் கைபுகுந்துவிட்டான்’ என்கிற பொருளும் ஈற்றடிக்குக் கொள்ளத்தகும்; ஆனாலும் மேலேவிவரித்தபொருளே சீரியது.

 

English Translation

He swallowed the seven worlds, he slew seven bulls, his cool resort is my consciousness.

 

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain