(2981)

கலந்தென்னாவி, நலங்கொள் நாதன்,

புலங்கொள் மாணாய், நிலம்கொண் டானே.

 

பதவுரை

கலந்து

-

ஒரு நீராகக்கலந்து

என் ஆவி

-

எனது ஆம்மாவினுடைய

நலம்

-

அடிமைத்தனமாகிய நன்மையை

கொள்நாதன்

-

தனக்காக்கிக் கொண்ட ஸ்வாமியானவன்

புலன்கொள் மாண் ஆய்

-

(கண் முதலிய) இந்திரியங்களைக் கவர்ந்து கொள்கின்ற (மநோஹரமான) வாமந ப்ரம்மசாரி சேஷத்தையுடையவனாய்

நிலம் கொண்டான்

-

(மூவடி) நிலத்தை பிக்ஷையேற்றுக் கொண்டான்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- என்னைத் தனக்கே அடிமைப்படுத்திக் கொண்டானென்கிறார். மஹாபலியைத் தன் வசப்படுத்தி, அவன் தன்னதாக அபிமானித்திருந்த பொருளைத் தன்னதாக்கிக் கொண்டதுபோலவே என்னோடே ஒரு நீராகக் கலந்து என்னாத்மாவைக் கொண்டான் நான் எனக்குரியேனாயிருக்கிற விருப்பைத் தவிர்த்தான்.

 

English Translation

Blending into my soul, he bears my good.  As a charming lad he measured the Earth.

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain