(2979)

வெற்பை யொன்றெடுத்து, ஒற்க மின்றியே,

நிற்கும் அம்மான்சீர், கற்பன் வைகலே.

 

பதவுரை

ஒன்று வெற்பை

-

(கோவர்த்தன மென்னும்) ஒரு மலையை

எடுத்து ஒற்கம் இன்றியே

-

இளைப்பிலாமல்

நிற்கும்

-

நின்றருளின

அம்மான்

-

எம்பெருமானுடைய

சீர்

-

திருக்குணத்தை

வைகல்

-

நாள்தோறும்

கற்பன்

-

பேசுக்கடவேன்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- அவனுடைய ருஜுத்வகுணத்தை இடைவிடாது பேசி யனுபவிக்கப்பெற்றமை தமக்கு நேர்ந்தபடியை யருளிச்செய்கிறார்.

ஒற்கமின்றியே நிற்கு மென்ற விடத்து, “கொடியேறு செந்தாமரைக் கைவிரல்கள் கோலமு மழிந்திலவாடிற்றில, வடிவேறு திருவுகிர்நொந்துமில் மணிவண்ணன் மலையுமோர்சம்பிரதம்” என்ற பெரியாழ்வார் திருமொழியும் “க்ஷோணீத்ரம் புநரபிபச் ச ஸப்தராத்ரம், - அம்லாநா வரத! ததாபி பாணயஸ்தே” என்ற வரத ராஜஸ்தவமும் ஸ்மரிக்கவுரியன். இந்திரன் மேகங்களை ஏவி மழைபெய்வித்துத் திருவாய்பாபடியிலுள்ள சராசரங்களைனைத்துக்கும் பெருத்த தீங்கை அறுத்தெறிய புகுந்ததற்குக் கண்ணபிரான் சீற்றமுற்று அவ்விந்திரன் தலையை அறுத்தெறிய வல்லமைபெற்றிருந்தபோõதிலும், அப்பிரான் அவன் திறத்து இறையேனுஞ் சீற்றங் கொள்ளாமல் ‘நம்மிடத்தில் ஆநுகூல்யமுடைய இந்திரனுக்கு இக்குற்றம் திடீரென்று நேர்ந்துவிட்டதத்தனை; பெரும்பசியாற் பிறந்த கோபத்தினால் இப்போது இவன் தீங்கிழைக்க ஒருப்பட்டனாயினும் சிறிதுபோது கழிந்தவாறே தானே ஒய்வன். இவனது உணவைக் கொள்ளைகொண்ட நாம் உயிரையுங் கொள்ளைகொள்ளக் கடவோர் மல்லோம்” எனப் பேரருள் பாராட்டி அடியாரை மலையெடத்துக்காத்த ருஜுத்வகுணம் இங்கு “அம்மான் சீர்” என்றதனால் காட்டப்பட்டதாகும்.

 

English Translation

Forever I shall praise the Lord who stood holding a mountain high that revealed his glory.

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain