(2977)

அம்மானாய்ப் பின்னும், எம்மாண புமானான,

வெம்மா வாய்கீண்ட, செம்மா கண்ணனே.

 

பதவுரை

அம்மான் ஆய்

-

ஸமியாயிருந்து

வெம்

-

உக்கிரமான

மா

-

குதிரையின் வடிவாகவந்த கேசி யென்னுமசுரனை

வாய் கீண்ட

-

வாய் கிழித்தவனும்

செம் மா

-

சிவந்துபெரிய திருக்கண்களையுடையவனுமான ஸ்ரீ க்ருஷ்ணன்

பின்னும்

-

பின்னையும்

எம்மாண்பும் ஆனான்

-

எல்லா அவதார ஸௌந்தரியமு முடையனாயினான்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கீழ்ப்பாட்டிற்கூறியபடி ஸ்ரீ கைகூண்டத்திலுள்ளாரோடு செவ்வியனாய்ப் பரிமாறகை மாத்திரமேயல்லாமல் அங்குநின்றம் இந்நிலத்திலே வந்து அவதரித்து விரோதிகளைத் தொலைந்து ஸம்ஸாரிகளுடன் பரிமாறும்படியும் எம்பெருமானுக்குள்ளதென்று இப்பாட்டிற் சொல்லுகிறது.

“அம்மானாய் வெம்மாவாய்கீண்ட செம்மா கண்ணன் பின்னும் எம்மான் புமானான்” என்று அந்வயிப்பது ஒருநாள் கண்ணபிரானைக் கொல்லுமாறு கம்ஸனாலேவப்பட்ட கேசி யென்பானோர் அஸுரன் குதிரையினுருவத்தோடு ஆயர்கள் அஞ்சி நடுங்கும்படி கனைத்துத் துரத்திக்கொண்டு கண்ணன் மீது பாய்ந்து வர, அப்பெருமான் தன் திருக்கையை நன்றாகப் பெருக்கி நீட்டி அதன் வாயிற் கொடுத்துத் தாக்கிப் பற்களையுதிர்த்து உதட்டைப்பிளந்து அதனுடம்பையும் இருபிளவாக வகிர்ந்து தள்ளினன் என்ற * வெம்மாவாய்கீண்ட வரலாறு இங்கு உணரத்தக்கது.

பின்னும் எம்மாண்புயானான் = இப்படி க்ருஷ்ணாவதாரஞ்செய்தருளினது மாத்திரமன்றியே இன்னமும் எத்தனையோ அவதாரங்களை செய்து தனது ருஜுத்வத்தை வெளியிட்டுக் கொண்டானென்பது பரமதாற்பரியம்.

 

English Translation

Though Lord of all, he took birth, as lotus-eyed Kirshna, fore Kesin's jaws.

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain