(2976)

ஓடும்புள்ளேறி, சூடும தண்டுழாய்,

நீடு நின்றவை, ஆடும் அம்மானே.

 

பதவுரை

நீடு நின்ற அவை

-

நித்யஸூரிகளாயிருக்கின்ற பெரிய திருவடி முதலானரோடு

சூடும்

-

கூடிப்பரிமாறுகிற

அம்மான்

-

ஸ்வாமி

புள் ஏறி

-

பெரியதிருவடிமேற்கொண்டு

ஓடும்

-

(விரைந்து) ஓடுவன்;

தண் துழாய்

-

குளிர்ந்த திருத்துழாய் மாலையை

சூடும்

-

சாத்திக்கொள்வன்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- நித்ய விபூதியிலுள்ளாரோடு செவ்வைக்குணமுடையனாய்ப் பரிமாறும்வகை இப்பாட்டிற் சொல்லப்படுகிறது. பரமபதத்திலே செவ்வைக்கேடு சிறிது மில்லாமையாலே அவர்களோடு எம்பெருமான் செவ்வியனாய்ப் பரிமாறுகிறான் என்றால் இதற்கு ஒரு பொருளில்லையே; ஸம்ஸாரிகளான நமக்கன்றோ செவ்வைக் கேடு உள்ளது; நம்மோடு பரிமாறுந்திறத்தில் செவ்வியனாய்ப் பரிமாறுகிறானென்றால் இது பொருந்தும்; செவ்வையே உள்ளதானவிடத்தில் செவ்வியனாய்ப்பரிமாறுகிறானென்கைக்கு ப்ரஸக்தியில்லையே! என்று சிலர் சங்கிக்கக்கூடும்; கேண்மின்; பரமபதத்திலுள்ளார்க்குச் செவ்வைக்கேடு இல்லையென்பது உண்மையே; அங்குள்ளாரெல்லார்க்கும் விஷயம் பகவத் விஷயமொன்றேயாகிலும் ஒவ்வொருவர் ஒவ்வொருவருவிதமான பணிவிடையைப் பரிக்ரஹிக்கின்றமையால் அந்த வ்ருத்திபேத்தா? ருசிபேதமுண்டாகுமே அவரவர்களது ருசிக்கீடாகவே பரிமாறுகிறானென்கிறது பெரிய திருவடிக்குத் தன்னைச்சுமந்து திரிகை அபேஹிதமானால் அவன்மேலேறிஸஞ்சரிப்பன்; திருத்துழாய் செவ்வியழியாமல் சூடவேண்டும் நிலையறிந்து அதனைச் சூடிக்கொள்வன்; ஆகவிப்படி சாச்வதமாக அந்த நித்யஸூரிகளோடே ஒரு நீராகக்கலந்து பரிமாறுவனெம் பெருமான் என்றதாயிற்று.

மூன்றாமடியில் அவை என்றது முன்னடிகளிற்சொன்ன புள்ளையும் துழாயையுமாம். நித்யஸூரிகளாய்ப் பரம சேதமநர்களாயிருக்கின்ற அவர்களை அவை என்று அஃறிணைப் பெயர்ச்சுட்டாற்சொன்னது வழக்குப்ற்றிய வழுவமைதி யென்னலாம்.

‘அவற்றோடே பரிமாறும்’ என்னாதே அவையாடும் என்றது எம்பெருமானுக்கு அவர்களோடே அணையுமது விடாயர் மடுவிலே புகுந்து குடைந்து ஆடினாப்போலே யிருக்குந்தன்மையைக் காட்டுதற்கென்ப.

 

English Translation

Our own lord, he wears cool Tulasi, rides the Garuda bird and lives with eternals.

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain