nalaeram_logo.jpg
(2625)

வலியம் எனநினைந்து வந்தெதிர்ந்த மல்லர்

வலிய முடியிடிய வாங்கி,-வலியநின்

பொன்னாழிக் கையால் புடைத்திடுதி கீளாதே,

பன்னாளும் நிற்குமிப் பார்.

பதவுரை

வலியம் என நினைந்து

-

நாமே பலசாலிகள்’ என்று நினைத்துக் கொண்டு

வலிய முடி

-

வலிதான தலைகள்

இடிய

-

சிதறியொழியும்படி

வாங்கி

-

போக்கடித்து

நின்

-

உன்னுடைய

வலிய பொன் ஆழி கையால்

-

வலிதாயும் அழகிய திருவாழியையுடையதாயுமுள்ள திருக்கையாலே

புடைத்திடுதி

-

(அந்த மல்லர்களை) அடித்துவிட்டாய்;

வந்து எதிர்த்த மல்லர்

-

எதிரிட்டு வந்த மல்லர்களுடைய

(நீ கைகோகக் காரியம் செய்ததைக் கண்ணால் கண்டு வைத்தும்)

இப்பார்

-

இவ்வுலகமானது

கீளாதே

-

வயிறு வெடித்து மாய்ந்து போகாமல்

பல் நாளும் நிற்கும்

-

சிரஞ்ஜீவியாயிருக்கின்றதே! (என்ன கல் நெஞ்சோ!)

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (வலியமென நினைந்து) பூதனையைமுடித்த விஷயத்தைக் கீழ்ப்பாட்டில் பேசவே, அத்தோடு ஒரு கோவையான மல்லவத சரித்திரமும் நினைவுக்குவர, அதனை இப்பாட்டில் பேசுகிறார். முரட்டுமல்லர்களோடு நீ போர் செய்ய நேர்ந்த காலத்து உனது ஸுகமாரமான திருக்கைகளாலே அந்த மல்லர்களை நீ புடைக்கும் போது இவ்வுலகில்கண் இருந்த படுபாவிஜனங்களெல்லாம் “ஐயோ! நமது சரண்யனுக்கு என்ன தீங்க விளைந்திடுமோ!” என்று சிறிதும் வயிற்றெரிச்சல் படாதே கல்லாகக் கிடந்தவனே! அந்தோ! என்று இன்று தாம் வயிற்றெரிச்சல் படுகிறார்.

ஸ்ரீக்ருஷ்ண பலராமர்களை எவ்வகையினாலாவது கொன்றிட வேணுமென்று கறுக்கொண்ட கம்ஸன் வில்விழாவென்கிற ஒரு வியாஜம் வைத்து அவர்களைத் தனது படைச்சாலைக்கு வரவழைத்தான்; அப்போது அவர்கள் அவனது ஸபையிற் செல்லுகையில் அவர்களை யெதிர்த்துப் பொருது கொல்லும்படி கம்ஸனால் ஏவி நிறுத்தப்பட்டிருந்த சாணூரன் முஷ்டிகள் முதலிய பெருமல்லர்கள் சிலர் வந்து எதிர்த்து உக்கிரமாகப் பெரும்போர் செய்ய, அவர்களையெல்லாம் அவயாதவ வீரரிருவரும் மற்போரினாலேயே கொன்று வென்றிட்டனர் என்பது மல்லரைப் புடைத்த வரலாறு. அன்றி, கண்ணன் பாண்டவ தூதனாய்த் துரியோதனனிடஞ் சென்றபொழுது துரியோதனன் ரஹஸ்யமாகத் தனது ஸபாமண்டபத்தில் மிகக்பெரிய நிலவறை யொன்றைத் தோண்டுவித்து அதில் அனேக மல்லர்களை ஆயுதபாணிகளாய் உள்ளேயிருக்கவைத்து அப்படுகுழியைப் பிறர் அறியவொண்ணாதபடி மூங்கிற்பிளப்புக்களால் மேலே மூடி அதன்மேற் சிறந்த ரத்நாஸநமொன்றை யமைத்து அவ்வாஸனத்திற் கண்ணனை வீற்றிருக்கச் சொல்ல, அங்ஙனமே ஸ்ரீபிருஷ்ணன் அதன் மேல் ஏறின பாத்திரத்திலே மூங்கிற் பிளப்புக்கள் முறிபட்டு ஆஸனம் உள்ளிறங்கிப் பிலவறையிற் செல்லுமளவில் அப்பெருமான் மிகப்பெரிதாக விச்வரூபமெடுத்துக் பல கைகளையுங் கால்களையுங் கொண்டு எதிர்க்கவே, அப்பிலவறையிலிருந்த மல்லர்கள் அழிந்தனர் என்பதொரு கதையும் உண்டு.

நாங்களே மஹா பலசாலிகள் என்ற செருக்குற்று எதிரிட வந்த மல்லர்களுடைய வலிமிக்க முடிகள் சிதறிப்போம்படி நீ உனது அழகிய திருக்கைகளால் புடைக்கச்செய்தே அதனைக் கண்டு கொண்டிருந்த இவ்வுலகமானது வயிறுவெடித்து மாய்ந்து போகாமல் சிரஞ்சீவியாயிருந்ததே! என்ன கல் நெஞ்சே! என்றாயிற்று.

பின்னடிகட்கு மற்றொருவகையாகவும் பொருள் கொள்ளலாம்; வலியநின் பொன்னாழிக்கையால் கீளாதே புடைத்திடுதி= இரணியனது மார்வைக் கீண்டெறிந்தது போலும் கேசியின் வாயைக் கீண் டெறிந்ததுபோலும் மல்லர்களையும் கீண்டெறியாமல் மற்போர் செய்யும் முறைமைக்குத் தகுதியாகத் திருக்கைகளாலே புடைத்திட்டாய்; அப்படி புடைத்திராவிடில் இந்த உலகம் அஸ்தமித்துப் போயிருக்கும். அந்த மல்லர்களை நீ புடைத்திடவே (நீயும் பிழைத்து) இவ்வுலகமும் நிலைபெற்றுநிற்கிறது என்னவுமாம்.

English Translation

O Strong one!  The wrestlers thought they were strong, but you, -with your beautiful discus-bearing hands, -rolled their strong heads and destroyed them.  Now the world can live undisturbed for many years.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain