(2621)

ஆமா றறிவுடையார் ஆவ தரிதன்றே?

நாமே அதுவுடையோம் நன்னெஞ்சே,-பூமேய்

மதுகரமே தண்டுழாய் மாலாரை, வாழ்த்தாம்

அதுகரமே அன்பால் அமை.

 

பதவுரை

நல் நெஞ்சே

-

நல்ல மனமே!

ஆம் ஆறு அறிவு உடையார் ஆவது

-

யுக்தமான அறிவை உடையவராக ஆவது

அரிது அன்றே

-

(உலகில் யார்க்கும்) அருமையன்றோ;

அது

-

அப்படிப்பட்ட அறிவை

நாமே உடையோம்

-

(பகவத் கிருபையால்) பெற்றிருக்கின்றோம்;

(ஆகையால் நீ செய்யத்தக்கது என்னவென்றால்)

பூ மேய் மதுகரம் மே தண் துழாய்

-

பூக்களிலே மேய்கின்ற வண்டுகள் படிந்துள்ள குளிர்ந்த திருத்துழாயையுடையனாய்

மாலாரை

-

(ஆச்ரிதர் திறத்தில்) வ்யாமோஹமுடையான பெருமாளை

வாழ்த்து ஆம் அது

-

வாழ்த்துவதாகிற அக்காரியமொன்றிலேயே

அன்பால்

-

பக்தியுடன்

கரமே

-

திண்ணமாக

அமை

-

ஊன்றியிரு.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (ஆமாறறிவுடையார்.)  கீழ்ப்பாட்டில் எம்பெருமானுடைய ஸௌலப்யத்தைப் பேசினார்; அது நம் நெஞ்சுக்கு மிகவும் ரஸித்தது. அந்த ஸௌலப்யத்தையே நெஞ்சு அநுஸந்தித்து ஆநந்தப்பட்டுக் கொண்டிருந்தது. ஆழ்வார் அந்த நெஞ்சை நோக்கி “இப்படிப்பட்ட ஸௌலப்யம் எம்பெருமானுக்குள்ளதென்று நீ நன்கு அறிந்து கொண்டாயன்றோ; இந்த அறிவு எல்லார்க்கும் எளிதாக உண்டாமதன்று; ஏதோ எம்பெருமானது இன்னருளாலே நமக்கு உண்டாகப் பெற்றோம்; ஆகையாலே இனி ஒருகாலும் நைச்சியம் பாவித்துப் பின்வாங்கப் பாராதே அப்பெருமானுடைய போக்யதையிலும் சீலத்திலும் ஈடுபட்டு அவனை வாழ்த்துவதே தகும் என்கிற அத்யவஸாயத்தைத் திண்ணியதாகக் கொள்” என்று உபதேசிக்கிறார்.

ஆமாறறிவுடையாராவது அரிதன்றே = ஸாமாந்யமாக அறிவு என்பது எல்லார்க்குமிருந்தாலும் அஃது ஆமாறறிவு அல்ல; ஸத்தை பெறுதற்கு உறுப்பான அறிவு அல்ல என்றபடி. எம்பெருமானுடைய உத்தம குணத்தை அநுஸந்திப்பதாகிற நல்லறிவு எல்லார்க்கும் உண்டாகக்கடவதன்றே; தைவாதீனமாக அது நமக்கே உண்டாகப்பெற்றோம் என்கிறார். “நான் அறிவில்லாதவன்” என்று சொல்லிக்கொள்ள வேண்டியதன்றோ ஸ்வரூபம்; அப்படியிருக்க “நாமே நல்லறிவு உடையோம்” என்று சொல்லிக் கொள்ளுதல் தற்புகழ்ச்சியாகதோ? எனின்; ஆகாது. “மயர்வற மதிநல மருளினன் யவனவன்” என்று முதலடியிலே அருளிச் செய்தது தற்புகழ்ச்சியாமாகில் இதுவும் அங்ஙனேயாம். எம்பெருமானது திருவருளாலே பெற்ற பேற்றை ஸந்தோஷமிகுதியாலே வெளியிடுகிறாரித்தனை.

நல் நெஞ்சே! = *** மந ஏவ மநுஷ்யாணாம் காரணம் பந்த மோக்ஷியோ” என்ற நல்வழி போவதற்கும் தீ வழிபோவதற்கும் அவரவர்களுக்கு நெஞ்சே காரணம் என்று சாஸ்த்ரம் சொல்லியிருப்பதனால், நெஞ்சைப் பாராட்டி விளிக்கின்றார்: எப்போதும் தமக்கு நன்மையே புரிவதற்காக.

(பூ மேய் இத்யாதி.) பூவிலே பொருந்தும் வண்டுகள் சேர்ந்திருந்துள்ள திருத்துழாயை அணிந்திராநின்ற ஸர்வேச்வரனை அன்பினால் மங்களாசாஸநம் பண்ணுகையாகிற ஒரு காரியத்தையே சிக்கனப் பிடித்துக்கொள் என்று தம் திருவுள்ளத்திற்கு உபதேசித்தாராயிற்று. கீழ்ப்பாட்டில் எம்பெருமானுடைய ஸௌலப்யம் சொன்னாரே; அது மாத்திரமல்ல; அவனுடைய போக்யதையும் ஒப்பற்றது என்கிறார் இதில். மாலாரை என்றதனால் ஆச்ரிதர் திறத்திலே வ்யாமோஹங் கொண்டிருக்கையாகிற சீலகுணம் சொல்லுகிறது. ** என்ற வடசொல் இங்கே கரமெனத் திரிந்தது. அவ்வடசொல்லுக்கு த்ருடம் என்று பொருள்.

 

English Translation

Seeing his multitudinous forms, the he there, the he here, the he betwixt, and the he in the sky, do not get confused, know the Krishna alone pervades all, and worship him.  He will appear in all the forms you desire.

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain