nalaeram_logo.jpg
(2493)

பலபல வூழிக ளாயிடும், அன்றியோர் நாழிகையைப்

பலபல கூறிட்ட கூறாயி டும்,கண்ணன் விண்ணனையாய்

பலபல நாளன்பர் கூடிலும் நீங்கிலும் யாம்மெலிதும்

பலபல சூழ லுடைத்து,அம்ம! வாழியிப் பாயிருளே.

பதவுரை

கண்ணன் விண் அணையாய்

-

எம்பெருமானுடைய பரமபதம்போல மிகப் பிரியமானவளே!

பல பல வழிகள் ஆயிரம்

-

(நாயகரைப் பிரிந்த நிலையில் இருட்பொழுது) மிகப்பல கற்பகங்களாக நிற்கும்;

அன்றி

-

அதுவல்லாமல்

(நாயகரோடு கூடியிருக்கும் நிலையில் இந்தப் பொழுதுதானே)

ஒரு நாழிகையை பலபல கூறு இட்ட கூறு ஆயிடும்

-

ஒரு நாழிகையைப் பலபல பகுப்புகளாக்கிய கூறுகளில் ஒரு கூறாக ஆகா நிற்கும்;

அன்பர்

-

நாயகர்

பல பல நாள் கூடினாலும்

-

பல பல நாள் கூடிநின்றாலும்

(காலம் மிகச் சுருங்குதலால்)

யாம் மெலிதும்

-

யாம் வருந்துகிறோம்; (ஆதலால்)

(அன்பர் பல பல நாள்) நீங்கினாலும்

-

(நாயகர் பலபல நாள்) நீங்க நின்றாலும்

(காலம் மிக வளர்தலால்)

யாம் மெலிதும்

-

யாம் மிக வருந்துகிறோம்;

(ஆதலால்)

இ பாய் இருள்

-

இந்தப் பரந்த இருட்பொழுது

பல பல சூழல் உடைத்து

-

சிறுமைக்கும் பல உபாயமுடையதாய்ப் பெருமைக்கும் பல உபாயமுடையதாயிரா நின்றது.

பல பல சூழல் உடைத்து

-

அம்ம வாழி- எந்த நிலையிலும் வருத்துகின்ற இவ்விருட்பொழுது) அந்தோ! வாழ்க.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- நாயகனோடு கூடியிருந்து பிறகு விதிவசந்தாற் பிரிந்த நாயகி அப்பிரிவை ஆற்ற மாட்டாதாளாய், நாயகனில்லாமல் இராப்பொழுதைக் கழிக்க முடியாதிருக்கிறபடியைத் தோழிக்குச் சொல்லுகிறாள். ஒருநாளும் விச்லேஷமில்லாத ஸம்ச்லேஷத்திலே தனக்கு ஆவலுள்ளமையை இதனால் வெளியிடுகிறபடி. இங்ஙனன்றியே, ஸம்ச்லேஷம் நடந்த பின்பு நாயகியை நோக்கித் தோழியானவள் அக் கலவிநிகழ்ச்சியின் தன்மைபற்றிக் கேட்க, பிரிந்திருக்கும்போது காலம் நெடுகுவதுபோல, கூடியிருக்கும்போது காலம் குறுகும்படி என்னே!” என்று கலவிநிலையிற் காலங்கழிவது தெரியாது கழிந்த இன்பச் சிறப்பைக் கூறினாள் நாயகி என்றுங் கொள்ளலாம்.

‘நீங்கில் ஊழியாயிடும்; கூடில் நாழிகைக் கூறாயிடும்’ என்று மாறிச் சென்று அந்வயிப்பதால், எதிர்நிரனிறைப் பொருள்கோள்; மொழிமாற்று நிரனிறை, மயக்க நிரனிறையென்பதும் இது. நாயக நாயகிகள் பரஸ்பரம் கூடியிருக்கும்போது நீண்ட காலங்களெல்லாம் ஒரு நொடிப்பொழுதுபோல் விரைவிற் கழிந்திடுதலும், பிரிந்திருக்கும்போது அற்பகாலமும் நெடுகித் தோற்றுதலும் ஒவ்வொருவருவடைய அநபவத்திலும் காணத்தக்கதாம்.

அன்பர் நீங்கில் பலபல வூழிகளாயிடும் = நாயகரைப் பிரிந்து நிற்குங்காலம் பல அவாந்தர கல்பத்தையுடைத்தான் பல மஹா கல்பங்கள் போலே நீண்டு தோற்றுகின்றது என்கை. (ஊலெல்லாஞ்துஞ்சி’ என்னுந் திருவாய் மொழியை இங்கே நினைப்பது.) அன்பர் கூடில் ஓர்நாழிகையைப் பலபல கூறிட்ட கூறாயிடும் = நாயகரோடு கூடியிருக்குங் காலம் மிகச்சிறிய பொழுதாகக் கழிந்து விடுகின்றது; ஒரு நாழிகையைப் பலபல கூறுகளாகப் பகுத்துக்கொண்டே வந்தால் கலை காஷ்டை நிமிஷம் முதலியவற்றால் இனிக் கூறிட வொண்ணாதென்னும்படி ஓர் சிறிய காள அளவு தேறுமே; அந்த க்ஷணம்போல் கழிந்து விடுகின்றதாம் ஸம்ச்லேஷகாலம்.

ஆளவந்தார் ஸ்தோத்ரத்தில் எம்பெருமான் பிராட்டியோடு புணர்ந்து அவளை உகப்பிக்கும் பரிசு சொல்லுகிறவளவில், (44) ஆம்சுலோகத்தில், ‘க்ஷணாணுவத் க்ஷிப்த பாரதி காலயா” என்றிட்ட விசேஷணம் இங்கு நோக்கத்தகும்; பிரமனுடைய ஆயுட் பிரமாண காலத்திற்குப் பரம் என்று பெயர்; அதில் பாதியளவான காலத்திற்குப் ‘ப்ரார்த்தம்’ என்ற பெயர்; இப்படிப்பட்ட மிகப் பெரிய பெரிய காலங்களெல்லாம் சிறிய நொடிப் பொழுதுபோல்  கழிகின்றனவாம். பகவத் கீரீடையில். “அவிதித கதயாமா ராத்ரியேவ வ்யாம்ஸீத்” என்று உத்தரராம சரித நாடகத்திற் சொன்னதையும் ஒரு போலியாக இங்கு ஸ்மரிப்பது, ஆச்சரியமாக லீலாரஸங்களை யநுபவிக்கத் தொடங்கிவிட்டால் பல்கோடி நூறாயிரம்ஸம் வத்ஸரங்களும் அவலீலையாகக் கழிந்து போமிறே.

அன்பர் கூடிலும் நீங்கிலும் யாம் மெலிதும் = கூடியிருக்குங்காலம் ஒரு க்ஷணமாய்க் கழிந்து போகிறதேயென்று வருத்தம்; பிரிந்திருக்கும் காலம் பலபல காளராத்ரியாய் நெடுகுகின்றதேயென்று வருத்தம். ஸம்ச்லேஷமானது விச்லேஷத்தை அடுத்துடைத்தன்றி யிராதாதலாலும் அந்த ஸம்ச்லேஷ காலந்தான் அதிஸ்வல்பமாகக் கழிதலாலும் அந்தோ! ஸம்ச்லேஷத்தையும் விரும்ப யோக்யதை யில்லையாயிற்றே! என்று வருந்துகிறபடி, மெலிதும் = “தும்” விகுதி கால முணர்த்தாது தன்மையுணர்த்திற்று.

இப்பாயிருள் பலபல சூழலுடைத்து = இராப்பொழுதின் ஸாமர்த்தியத்தை என்சொல்லுவேன்! கலவியில் குறுக்கற்றது, பிரிவில் நெடுகக்கற்றது, சூழல் - சூழ்ச்சி; விரகு, அம்ம- இடைச்சொல் (அவ்வமயம்); வியப்பும் வருத்தமுந்தோன்றும். வாழி- மிக்க வெறுப்பினால் நிந்திக்க வேண்டுமிடத்தில் விபரீத லக்ஷணையாக ‘வாழி’யென்கிறது.

இதற்கு உள்ளுறை பொருளாவது:- பாகவதரைக் கூடிய நிலையில் அதிஸ்வல்பமும் அவர்களைப் பிரிந்த நிலையில் அதி மஹத்துமாகிற காலத்தினால் இருவகையிலும் தாம் படுகிற தளர்ச்சியை ஆழ்வார் தமது அன்பர்க்குக் கூறுவதாம். ‘இப்பாயிருள்’ என்றது- மோஹாந்தகாரத்தைச் செய்வதான காலம் என்றபடி, கண்ணன் விண்ணனையாய்= காலபரிணாம மில்லாத பரமபதம்போலுள்ளீர் நீங்கள் எனக் கொண்டாடியபடி, ‘அம்மவாழி’ என்றது- தான் நினைத்த வடிவு கொள்ளவல்ல காலத்தின் தன்மையை வியந்து நொந்தபடி.

English Translation

O Friend, sweet as krishna's sky abode! This pervading darkness can stretch for many, many aeons, or can shrink to an infinitesimal fraction of a moment, whether our heart's lover joins us of leaves us, both ways we stand to suffer.  Alas, this darkness is full of viles! May it live.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain