(2448)

வலமாக மாட்டாமை தானாக, வைகல்

குலமாக குற்றம்தா னாக,- நலமாக நாரணனை

நம்பதியை ஞானப் பெருமானை,

சீரணனை யேத்தும் திறம்.

 

பதவுரை

நாரணைனை

-

ஸ்ரீமந் நாராயணனாய்

நாபதியை

-

(என்னுடைய) நாவுக்கு ப்ரவர்த்தகனாய்

ஞானம் பெருமானை

-

அறிவிற்பெயரியவனாய்

வைகல் நலம் ஆக ஏத்தும் திறம்

-

எப்போதும் நன்றாகத் துதி செய்கையாகிற இந்த

வலம் ஆக

-

நன்மைதருவதாகிலுமாகுக

சீர்அணனை

-

நற்குணங்களை பொருந்தியிருக்கப்பெற்றவனான ஸர்வேச்வரனை

மாட்டாமை தான் ஆக

-

நன்மைதரமாட்டாதாகிலுமாகுக,

குலம் ஆக

-

நற்குலத்தைத் தருவதாகிலுமாகுக

குற்றம் தான் ஆக

-

கெடுதலை யுண்டாக்குவதாகிலுமாகுக (எத்துவதை நான் தவிரமாட்டேன்)

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- ஸ்ரீமந்நாராயணனைத் துதிசெய்வதே தொழிலாக நானிருப்பது எனக்கு நன்மையைத் தரவல்லது என்றும் நற்குலத்தை விளைக்கவல்லது என்றும் நான் நினைத்திருக்கிறேன். இந்த என்னினைவின்படியே ஆகிலுமாகுக, இதற்கு விபரீதமாகக் கெடுதலை விளைக்கவல்லதானாலுமாகுக இதில் எனக்கொரு விவக்ஷையில்லை எம்பெருமானை ஏத்துகையே எனக்கு உத்தேச்யம் என்கிறார்.

வலமாக –எம்பெருமானைத் துதிப்பதானது என்னுடைய கொள்கையின்படி ஸனாத்தைக் கொடுப்பதாகவுமாம், மாட்டாமை தானாக –எம்பெருமானது வைபவமறியாத உங்களுடைய கருத்தின்படி தத்விபரீதமாகவுமாம். எப்படியானாலேனக்கென்ன? நானொரு பலனை விரும்பினவனல்லேன், ஸ்வயம் புருஷார்த்தமாக எம்பெருமானைத் துதிப்பேன் நான் என்றவாறு. “வலமாக –குலமாக“ என்றவற்றுக்குச் சார்பாக “குலந்தருஞ் செல்வந்தந்திடும்......... வலந்தரும் மற்றும் தந்திடும்..... நாராயணாவென்னும் நாமம்“ என்ற திருமங்கையார் பாசுரம் அநுஸந்திக்கத்தகும்.

 

English Translation

The Lord in my tongue, is the Lord of knowledge, the lord of virtues, the Lord Narayana. Whether it is beneficial or furtile, whether it is praise worthy or blameworthy, chanting his name is always good.

 

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain