(2440)

அன்பாவாய் ஆரமுதம் ஆவாய், அடியேனுக்

கின்பாவாய் எல்லாமும் நீயாவாய், - பொன்பாவை

கேள்வா கிளரொளியென கேசவனே, கேடின்றி

ஆள்வாய்க் கடியேன்நான் ஆள்.

 

பதவுரை

அன்பு ஆவாய்

-

(என் பக்கல்) ப்ரீதியே வடிவெடுத்தவன் போலிருப்பவனே!

ஆர் அமுதம் ஆவாய்

-

பரமபோக்யனாயிருப்பவனே!

அடியேனுக்கு இன்பு ஆவாய்

-

(உன்னுடைய அநுபவமாகிய) ஸுகத்தை அடியேனுக்கு உண்டாக்கினவனே!

என் கேசவனே

-

எம்பெருமானே!

கேடு இன்றி

-

ஒருகுறையுமில்லாமல்

ஆள்வாய்க்கு

-

ரக்ஷிக்கவல்லவுனுக்கு

எல்லாமும் நீ ஆவாய்

-

மற்றுமுள்ள ஸுகங்களு மெல்லாம் எனக்கு நீயேயா யிருப்பவனே!

பொன் பாவை கேள்வா

-

திருமகள் நாதனே!

கிளர் ஒளி

-

(அத்திருமகளின் சேர்த்தியினால்) கொழுந்து விட்டு வளர்கின்ற காந்தியையுடைய

நான் அடியேன்

-

நான் அடிமைப் பட்டவனா யிருக்கிறேன்

ஆள்

-

(அடியேனைக் காத்தருள்)

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- திருமாலே! உன்னைத் தவிர்த்து மற்ற தெய்வங்களுக்கு ஆடபட்டால் அவர்கள் ரக்ஷிக்கமாட்டாததோடு கெடுதல்களையும் விளைத்திடுவர்கள், நீயோ அப்படியல்லாமல் ஒரு கெடுதலுமின்றி ஆளவல்லை, ஆகவே நான் உனக்கு அடிமைப்பட்டவனானேன், காத்தருளாய் என்கிறார்.

அன்பு ஆவாய் – “அன்பு“ என்பது வேறொன்றாய், அதை நீ உடையவனாயிருக்கின்றாய் எனறு சொல்லவேண்டாமல், நீயே அன்புதானாக வடிவெடுத்திருக்கின்றாய் என்கை. என்பக்கல் அளவற்ற அன்புவைத்திருக்கின்றாயென்றவாறு. ஆரமுதமாவாய் இன்பாவாய் – தாய் தந்தையராலுண்டாகு மாநந்தம், மக்களாலுண்டாகுமாந்தம், மனைவியாராலுண்டாகு மாநந்தம், மக்களாலுண்டாகுமாநந்தம், மனைவியாராலுண்டாகு மாநந்தம் முதலிய எல்லா ஆனந்தங்களையும் உன்னநுபவத்தால் நானைடைகின்றேனென்கை. இப்படியெல்லாம் நீ ஆநந்தகரனாயிருப்பதற்குக் காரணம் லக்ஷமீபதித்வமே யென்கைக்காகப் பொன்பாவை கேள்வா! என விளித்தார். பிராட்டியைச் சொல்லும் வேகம் “***“ என்றும் “***“ என்றும் சொன்னதற்கேற்பப் பொன்பாவையென்றார். பிராட்டியைக் கைப்பிடித்ததனால் ஒரு விலக்ஷணமான தேஜஸ்ஸு விளைகின்றதென்பது தோன்ற “பொன்பாவை கேள்வா கிளரொளி“ என்றார். “***“ என்ற மாரீசவசநமும் காண்க.

ஆள் என்பதை முன்னிலை வினைமுற்றாக கொள்ளாமல், அடியேன்நான் – அடியேனாகிய நான் ஆள் – ஆட்பட்டேன் என்பதாகவுங் கொண்டுரைக்கலாம்.

 

English Translation

O Lord of lotus-dame Lakshmi My radiant kesava! You are my love! You are my ambrasial you are sweet me! You are my all you rule me without a fault! I am your humble servant.

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain