(2438)

ஒருங் கிருந்த நல்வினையும் தீவினையு மாவான்,

பெருங்குருந் தம் சாய்த்தவனே பேசில், - மருங்கிருந்த

வானவர்தாம் தானவர்தாம் தாரகைதான், என்னெஞ்சம்

ஆனவர்தா மல்லாக தென்.

 

பதவுரை

பேசில்

-

உண்மைபேசப் புகுந்தால்

பெரு குருந்தம் சாய்த்தவனே

-

பெரிய குருந்தமரத்தை வேர் பறியத்தள்ளி முறித்த கண்ணபிரானே

ஒருங்கு இருந்த நல் நினையும் தீ வினையும் ஆவான்

-

உடன்நிற்கும் புண்யபாபங்களுக்கு நிர்வாஹகன்,

மருங்கு இருந்த

-

ஸமீபத்திலுள்ள (அந்தரங்கரான)

வானவர்தாம்

-

தேவர்களும்

தானவர்தாம்

-

அசுரர்களும்

தாரகைதான்

-

இப்பூமியும் (ஆகிய இவையெல்லாம்)

என் நெஞ்சம் ஆனவர்தாம்

-

என் நெஞ்சினுள் உறைகின்ற ஸர்வேச்வரனேயாம்

அல்லாத்து என்

-

அந்த ஸர்வேச்வரனல்லாத வஸ்து என்ன இருக்கிறது.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- புண்ணியம் பாவம் முதலான ஸகல பதார்த்தங்களும் எம்பெருமானிட்ட வழக்காயிருக்கும், அவனிட்ட வழக்காகாத வஸ்து ஒன்றுமேயில்லை யென்கிறார். நல்வினையும் தீவினையும் அவனேயாவான் என்கிற விதன் கருத்து யாதெனில், “***“ என்கிற சுருதியின்படியே தன்னுடைய அநுக்ரஹத்துக்கு இலக்காக வேண்டினாரைக் கொண்டு நல்வினைகளைச் செய்வித்தும், தன்னுடைய நிக்ரஹத்துக்கு இலக்காக வேண்டினாரைக்கொண்டு தீவினைகளைச் செய்வித்தும் போருகிறவன் என்கை.

நலவினைகளின்பயனாகத் தேவயோநியிற் விறப்பதும், தீவினைகளின் பயனாக அஸுரயோநியிற் பிறப்பதும் இவ்விருவினைகளினுடையவும் பயனாக இப்பூமியிற் பிறப்பது மெல்லாம் பகவத்ஸங்கல்பாதீன மென்கிறது பின்னடிகளால்.

குருந்தம் சாய்ந்த வரலாறு – கண்ணபிரான் யமுனையில் நீராடும் ஆயர் மங்கைகளின் துகிலையெடுத்துக்கொண்டு அதன் கரையிலுள்ள குருந்த மரத்தின் மேலேறுகிற வழக்கத்தைக் கண்டிருந்தவனும் கம்ஸனா ஏவப்பட்டவனுமான ஓர் அஸுரன் கண்ணனை நலிவதற்காக அக் குருந்த மரத்தை ஆவேசித்துக் கிடந்தான், அதையறிந்த கண்ணபிரான் அந்த மரத்தை முறித்தொழித்தனன் என்பதாம்.

எம்பெருமானுக்குப் பல திருநாமங்கள் இருப்பதுபோல் “என்னெஞ்ச மானவர்“ என்பதும் ஒரு திருநாமம்போலும் ஆழ்வார் திருவுள்ளத்தால். என்னெஞ்சத்திலே ஸத்தை பெற்றிருப்பவர் என்றபடி. அன்றியே அஃறிணையான நெஞ்சையே கௌரவந்தோற்ற “நெஞ்சினார்“ என்பதுபோல இங்கு “நெஞ்சமானவர்“ என்று சொல்லியிருப்பதாகக்கொண்டு தம் திருவுள்ளத்தையே குறிப்பதாகவும் உரைக்கலாம், அப்போது, வானவர் தானவர் தாரகை என்னெஞ்சு (ஆகிய எல்லாம்) பெருங்குருந்தம் சாய்ந்தவனே என்றவறாம்.

 

English Translation

Come to speak, the Lord who broke the kurundu trees is alone the good and the bad of all karmas. Even the gods, the Asuras, the Earth,-What are all thee, if not the manifestations of the lord in my heart?

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain