(2434)

கல்லா தவரிலங்கை கட்டழித்த, காகுத்தன்

அல்லா லொருதெய்வம் யானிலேன், - பொல்லாத

தேவரை தேவரல் லாரை, திருவில்லாத்

தேவரைத் தேறல்மின் தேவு.

 

பதவுரை

கல்லாதவர் இலங்கை

-

அறிவுகெட்ட ராக்ஷஸருடையதான இலங்காபுரியை

கட்டு அழித்த

-

அரணழித்த

காகுத்தன் அல்லால்

-

இராமபிரானையல்லது

ஒரு தெய்வம்

-

வேறொரு தெய்வத்தை

யான் இலேன்

-

நான் தெய்வமாகக் கொள்வேனல்லேன்

பொல்லாத தேவரை

-

கண்கொண்டு காணக்கூடாத தேவதைகளையும்

தேவர் அல்லாரை

-

(உண்மையில்) தெய்வத் தன்மையற்றவர்களாயும்

திரு இல்லா தேவரை

-

பிராட்டியின் ஸம்பந்த மல்லாமலே தேவரென்று பேர் சுமப்பவர்களாயும்ள்ள சிலரை

தேவு

-

தெய்வங்களாக

தேறேல்மின்

-

நீங்கள் நினைக்க வேண்டா.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- முன்னடிகளால் தம்முடைய அத்யவஸாயத்தை அருளிச்செய்து, பின்னடிகளால் தேவதாந்தர பக்தியை விலக்கிக் கொள்ளுமாறு பிறர்க்கு உத்தேசிக்கிறார். கீழ்க்கழிந்த காலங்களில் நான் பலபல தெய்வங்களை வழிபட்டவனாயினும் முடிவாகத் தேவதாந்தரங்களெல்லாவற்றையும் பற்றறவொழித்து, ஸ்ரீராமபிரானையே பரமதெய்வமாகக் கொண்டவனாயினேன்.

இலங்கையிலிருந்த அரக்கர்களனைவரும் தங்களுடைய கெட்ட நடத்தைகளினாலேயே தமது அறிவின்மையை வெளிப்படுத்திக் கொண்டவர்களாதலால் “கல்லாதவரிலங்கை“ என்றார். கற்றுணர்ந்த மஹாநுபாவன் ஒருவன் (விபீஷணாழ்வான்) இருந்தானே யென்னில், அவனை யடித்துத்துரத்தினார்களிறே. காகுத்தன் –‘***‘ என்ற வடசொல் விகாரம்.

பொல்லாத தேவரை – ச்மசானமே இருப்பிடமாயிருத்தல், எலும்புகளை மாலையாக்க் கட்டியணிதல், விருபாக்ஷனாயிருத்தல் முதலியவற்றால் அமங்களங்களுக்குக் கொள்கலமாயிருப்பவர்களைத் தெய்வமாகக் கொள்ளத்தகுமோ?

தேவரல்லாரை – உள்ள அமங்களங்களையெல்லாம் ஸஹித்துக் கொண்டு ஆச்ரயித்தாலும் ஸ்வதந்த்ரமாகக் காரியஞ்செய்யவல்லமை யற்றியிருப்பதனால் தெய்வமென்று சொல்லத்தகாதவர்களை ஆச்ரயிக்கத்தகுமோ?

திருவில்லாத்தேவரை “***“ என்று வேதஞ்சொல்லுகிறபடியே பிராட்டியின் ஜம்பந்தமுள்ளவனுக்கேயன்றோ தேவத்வமுண்டு, லக்ஷமீபதியல்லாதாரைத் தேவனாகப் பணிதல் தகுமோ?

“காணிலு முருப்பொலார் செவிக்கினாத கீர்த்தியார், பேணிலும் வரந்தர மிடுக்கிலாத்தேவரை, ஆணமென்றடைந்து வாழுமாதர்காளெம்மாதிபால், பேணி நும்பிறப்பெனும் பிணக்கறுகக்கிற்றிரே“ என்று இவ்வாழ்வார்தாமே யருளிச்செய்த திருச்சந்த விருத்தத்திற் பாசுரமும் இங்கு நினைக்கத்தகும்.

 

English Translation

I know of no god other than the kakutstha Lord Rama who wiped out the unrelenting Rakshasa's Lanka city. Do not accept any non-god, bad god, or inauspicious god for worship.

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain