(2426)

புரிந்து மலரிட்டுப் புண்டரிகப் பாதம்,

பரிந்து படுகாடு நிற்ப - தெரிந்தெங்கும்

தானோங்கி நிற்கின்றான் தண்ணருவி வேங்கடமே

வானோர்க்கும் மண்ணோர்க்கும் வைப்பு.

 

பதவுரை

புண்டரீகம் பாதம்

-

திருவடித் தாமரைகளில்

புரிந்து

-

அன்புபூண்டு

மலர் இட்டு

-

புஷ்பங்களைப் பணிமாறி

பரிந்து

-

மங்களாசாஸநம் பண்ணி

படுகாடு நிற்ப

-

வெட்டி வீழ்த்த மரங்கள் போலே கால்பேராமல் நிற்கும்படியாக

எங்கும்

-

ஸகல ப்ரதேசங்களிலும்

தெரிந்து

-

விளங்கி

தான் ஓங்கி நின்கின்றான்

-

குணங்களால் பெருமை பெற்று எழுந்தருளியிருக்கும்பெருமானுடையதாய்

தண் அருவி வேங்கடமே

-

குளிர்ந்த அருவிகளை யுடைத்தான திருமலையே

வானோர்க்கும்

-

நித்யஸூரிகளுக்கும்

மண்ணோர்க்கும்

-

நிலத்தேவரான ஸ்ரீவைஷ்ணவர்களுக்கும்

வைப்பு

-

நிதியாயிருக்கும்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- திருமலை இந்நிலத்திலுள்ள ஸம்ஸாரிகளுக்கு மாத்திரம் ப்ராப்யமன்று, வானுலகத்துள்ள நிர்யஸூரிகளுக்கும் ப்ராப்யமென்கிறார்.

ஆதாரத்துடன் திருவடித் தாமரைகளில் புஷ்பங்களைப் பணிமாறி ‘ பல்லாண்டு பல்லாண்டு‘ என்றும் ‘ஜிதம்தே புண்டரீகாக்ஷ!‘ என்றும் மங்களாசலாஸநம் பண்ணி, கால்பெயர்ந்து வெளியில் போக மாட்டாமல் அவ்விடத்திலேயே அன்பர் குடிகொண்டிருக்கும்படியாகக் கடாக்ஷித்தருள்கின்ற ஸ்ரீநிவாஸன் நித்யவாஸம் பண்ணுமிடமாய், குளிர்ந்த அருவிகள் பாய்ந்து போக்யமான திருவேங்கடங்மலை நித்யஸூகனோடு ஸம்ஸாரிகளோடு வாசியற அனைவர்க்கும் புகலிடமாயிருக்கின்றது என்றதாயிற்கு.

பரிந்து -  பரிவாவது பயசங்கை பண்ணுதற்கு இடமல்லாதவிடத்தில் பயசங்கை பண்ணி அன்பு பாராட்டுதல் காப்பிடுதலைச் சொன்னபடி.

படுகாடுநிற்ப – படுகாடுபோல் நிற்கும்படியாக என்றபடி, உவமவுருபு தொக்கிக்கிடக்கிறது, வெட்டித்தள்ளப்பட்ட மரங்களைப் படுகாடு என்கிறது. அதுபோல் நிற்கும்படியாக வென்றது. – அம்மரங்கள் ஆடாது அசையாது அவ்விடத்திலேயே கிடப்பதுபோல் கிடக்கும்படியாக என்றவாறு வைப்பு - நிதி பூமிக்குள் புதைத்து வைக்கப்படுவது காரணக்குறி நிதிபோல் விரும்பத்தகுமென்கை.

 

English Translation

Everywhere on the hill amid cool mountain springs, the Lord appears before his devotees who sit in the forest meditating on his feet. The Venkatam lord is the permanent fund for gods and men alike.

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain