(142)
வணநன் றுடைய வயிரக் கடிப்பிட்டு வார்காது தாழப் பெருக்கி
குணநன் றுடையர்இக் கோபால பிள்ளைகள் கோவிந்தா நீசொல்லுக் கொள்ளாய்
இணைநின் றழகிய இக்கடிப்பு இட்டால் இனிய பலாப்பழம் தந்து
சுணநன் றணிமுலை யுண்ணத் தருவன்நான் சோத்தம் பிரான்இங்கே வாராய்.
பதவுரை
இ கோபாலர் பிள்ளைகள் |
- |
இந்த இடைப்பிள்ளைகள் |
வார் காது |
- |
(தமது) நீண்ட காதை |
தாழ பெருக்கி |
- |
(தோளளவுந்) தொங்கும்படி பெருக்கி |
வணம் நின்று உடைய |
- |
நல்ல நிறத்தை மிகுதியாகவுடைய |
வயிரம் கடிப்பு |
- |
வயிரக்கற்கள் அழுத்திச் செய்த கடிப்பை |
இட்டு |
- |
அணிந்து கொண்டு |
(இப்படி தமது தாய்மார் சொல்லியபடி செய்து) |
||
நன்று குணம் உடையர் |
- |
ஸத்குணசாலிகளாயிரா நின்றார்கள்; |
கோவிந்தா |
- |
கோவிந்தனே! |
நீ |
- |
நீயோவென்றால் |
சொல்லு |
- |
(தாயாகிய என்னுடைய) சொல்லை |
கொள்ளாய் |
- |
கேட்கிறாயில்லை; |
(இப்படியிராமல் எனது சொல்லைக்கேட்டு) |
||
இணை |
- |
ஒன்றோடொன்றொத்து |
நன்று அழகிய |
- |
மிகவுமழகியனவாயிருக்கிற |
இ கடிப்பு |
- |
இக்கடிப்பை |
இட்டால் |
- |
அணிந்துகொண்டால் |
நான் |
- |
நான் |
இனிய பலாப்பழம் தந்து |
- |
தித்திப்பான பலாப்பழங்கள் கொடுத்து |
சுணம் நின்று அணி முலை |
- |
சுணங்கையுடைய மிகவுமழகிய முலையையும் |
உண்ண |
- |
(நீ) பருகும்படி |
தருவன் |
- |
கொடுப்பேன்; |
பிரான் |
- |
ஸ்வாமியே! |
சோத்தம் |
- |
(உனக்கு) ஸ்தோத்ரம்; |
இங்கே வாராய். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
*** - கண்ணனைப் புகழ்ந்து அழைத்தும் அவன் வாராமையாலே மற்றையிடைப்பிள்ளைகள் காதுபெருக்கிக் காதணிகளை யணிந்திருப்பதைக் காட்டி அப்பிள்ளைகளைக் கொண்டாடிச் சொல்லி ‘இவர்களைப் போல நீயும் தாய் சொல் கேட்டுக் காது பெருக்கிக்கொள்ளவேண்டாவோ? அப்படிக் காது பெருக்கிக் கடிப்பை யணிந்தால் நானுனக்கு நல்ல பலாப்பழம் தருவதோடு முலையையும் உண்ணத் தருவேன்; அப்பா! உன்னைக் கும்பிடுகிறேன் நீ இங்கே வர வேணும்’ என்று கெஞ்சியழைக்கிறாள். வணம் - ‘வண்ணம்’ என்பதின் தொகுத்தல். வயிரக்கடிப்பு - வஜ்ரகுண்டலம். கோபாலர் + பிள்ளைகள் = கோபாலபிள்ளைகள்; “சில விகாரமா முயர்திணை”. சுணம் - “சுணங்கு” என்பதன் விகாரமென்பர்; முலைமேல் தோன்றும் நிறவேறுபாடு; பசலைநிறம். சோத்தம் - ஸ்தோத்ரம் என்ற வடசொற் சிதைவு என்னலாம்; இதற்கு - “அஞ்ஜலி பண்ணுமவர்கள் அதுக்கு அநுகூலமாகத் தாழ்ச்சிதோற்றச்சொல்லுவதற்கு சப்தவிசேஷம்” என்பது பெரியஜீயருரை.
English Translation
O Govinda! See, these cowherd-boys with long-drawn ears are wearing beautiful diamond earrings. They are well-mannered children. Listen to me. If you wear these beautiful ear-pendants, I shall give you sweet jackfruit and suck from my breasts with swollen teats. Ibeg of you, Master, come hither!