nalaeram_logo.jpg
(118)

மெச்சூது சங்கம் இடத்தான் நல்வேயூதி

பொய்ச்சூதில் தோற்ற பொறையுடை மன்னர்க்காய்

பத்தூர் பெறாதுஅன்று பாரதம் கைசெய்த

அத்தூதன் அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான்

பதவுரை

மெச்ச

-

(அனைவரும்) கொண்டாடும்படி

ஊது

-

ஊதுகின்ற

சங்கம்

-

பாஞ்சஜந்யத்தை

மிடத்தான்

-

இடக்கையில் ஏந்தியுள்ளவனும்

நல்வேய்

-

நல்ல வேய்ங்குழலை

ஊதி

-

ஊதுபவனும்

பொய் சூதில்

-

க்ருத்ரிமமான சூதிலே

தோற்ற

-

(தம்முடைய சொத்துக்களையெல்லாம்) இழந்தவர்களாய்

பொறை உடை

-

பொறுமைசாலிகளான

மன்னர்க்கு

-

பாண்டவர்கட்கு

ஆய்

-

(தான் எல்லாவகைத்) துணையுமாயிருந்து (துர்யோதநாதிகளிடத்துத்தூதுபோய்க்கேட்டுப் பார்த்தும் அவர்களிடத்தினின்றும்)

பத்து ஊர்

-

பத்து ஊரையும்

பெறாது

-

அடையமுடியாமல்

அன்று

-

அக்காலத்திலே

பாரதம்

-

பாரதயுத்தத்தை

கைசெய்த

-

அணிவகுத்துச் செய்து

அ தூதன்

-

அந்தப் பாண்டவ தூதனான கண்ணன்

அப்பூச்சி காட்டுகின்றான்

-

அப்படிப்பட்ட (மிகவும் பயங்கரமான) பூச்சி காட்டுகின்றான்;

அம்மனே

-

அம்மா!

அப்பூச்சி காட்டுகின்றான்-.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

*** - கண்ணபிரான் பாண்டவர் துர்யோதநாதிகள் என்ற  இருவரையும்  ஸந்திசெய்விக்கைக்காகத் துர்யோதநாதியரிடந் தூதராகச் சென்று ‘பாண்டவர்களும் நீங்களும் பகைமை கொள்ள வேண்டாம்; ராஜ்யத்தில் இருவருக்கும் பாகமுண்டு; ஆதலால் ஸமபாகமாகப் பிரித்துக்கொண்டு ஸமாதாநமாக அரசாட்சி செய்து வாழுங்கள்; அதற்கு ஸம்மதியில்லாவிடில் தலைக்கு இரண்டிரண்டு ஊராகப் பாண்டவர் ஐவர்க்கும் பத்து ஊரைக்கொடுங்கள்; அதுவும் அநஷ்டமாகில் பாண்டவர்கள் குடியிருக்கும்படி ஓரூரையாவது கொடுங்கள்’ என்று பலபடி அருளிச்செய்ய அந்தச் சொல்லுக்குச் சிறிதும் ஸம்மதியாமல் ‘பராகமமிருந்தாலர் போர்செய்து ஜயித்துக் கொள்ளட்டும்; இந்தப் பூமி வீரர்க்கே உரியது’ என்றிப்படி திக்காரமாக மறுத்துச்சொல்லவே தான் பாண்டவ பக்ஷபாதியாயிருந்து எதிரிகளைத் தோற்பித்தனனென்க.  மெச்ச - ஊது = மெச்சூது; தொகுத்தல் விகாரம்.  கண்ணன் பசுநிரை மேய்க்கும்போது திருச்சங்கையும் வேய்ங்குழலையும் கொண்டிருப்பனாதலால் அவனை ‘மெச்சூது சங்கமிடத்தான் நல்வேயூதி’ என்றார்:  “ஆநிரையினம் மீளக்குறித்த சங்கம்”  “கேயத்தீங்குழலூதிற்றும் நிரைமேய்த்ததும்” என்பனகாண்க.  ஊதி - ஊதுமவன்; பெயர்சொல்; வினையெச்சமன்று; ஊது - பகுதி இ - கருத்தாப்பொருள் விகுதி.  ஆகவே ‘ஊதிப்பொய்ச்சூதில்’ என இரட்டியாது ‘ஊதிபொய்ச்சூதில்’ என இயல்பாம்.  “கழல் சூடி கைந்நின்ற வேற்கைக்கலரியன்” என்ற விடத்திற்போல துர்யோதநன் தான் புதிதாய் மண்டபங்கட்டி அதைக் காண்பதற் கென்றொரு வ்யாஜமிட்டுப் பாண்டவர்களைத் தனது ஹஸ்திநாபுரிக்கு வரவழைத்துத் தந்த்ரமாகச் சகுநியைக் கொண்டு சூதாடுவிக்க அச்சூதில் தர்மபத்ரன் ராஜ்யததையும் தம்பியரையும் மனைவியையும் தன்னையுந் தோற்றானாதலால் பாண்டவர் பொய்ச்சூதில் தோற்ற மன்னராயினர்.  இவர்கள் தமக்குள் பொறுமையை மாத்திரம் சூதில் தோற்றிலராதலால் பொறையுடை மன்னருமாயினர்.  - பூச்சி காட்டுதலையே அப்பூச்சி காட்டுதலென்று வழங்குதலுமுண்டெனக் கொள்ளினுமாம்.  அப்பூச்சி காட்டுகையாவது - கண்ணை  இறுத்துவது மயிரால் முகத்தை மறைத்துக்காட்டுவது முதலாகச் செய்ய பயங்கரமான பாலசேஷ்டைகள்.  அம்மனே - அச்சத்தினாற் சொல்லும் சொல்லு இந்தப் பாசுரத்தினீற்றடியைக் குறித்து ஓர் ஐதிஹ்யம்:- இப்பாசுரத்தை நம்பெருமாள் ஸந்நிதியில் உடையவர் கோஷ்டியிலே ‘உய்ந்தபிள்ளை’ என்பாரொரு அரையர் அபிநியிக்குமளவில் ‘அத்தூதன்’ என்னும்போது ஸ்ரீகிருஷ்ணனையும் ‘அப்பூச்சி’ என்னும்போது கண் இமையை மடக்கிக்கொண்டு வருவதையுங் காட்டி அபிநயிக்க உடையவர் பின்னே எழுந்தருளியிருந்த எம்பார் தம் திருக்கைகளைத் திருத்தோள்களோடு சேர்த்துக்காட்ட அரையரும் தாம்முன் அபிநயித்ததைவிட்டு எம்பார் காட்டியதுபோலவே எம்பெருமான் திருத்தோள்களில் சங்குசக்கரங்கள் தரித்துக் கொண்டிருப்பதை அபிநயிக்க உடையவர் மிகவுமுகந்து ‘கோவிந்தப் பெருமாள்’ (எம்பார்) இருந்தீரோ? என்றாராம்: இதனால் ஏற்படுவதாவது - தூதனாய்த் தான் ஸௌலப்யத்தை வெளியிட்டு ‘நம்மிலே ஒருவன்’என்று இவ்வுலகத்தவர் கொள்ளும்படி யிருப்பவன் அவர்கள் அஞ்சும்படி சில காலங்களில் ஈச்வரத்வ சின்னங்களைக் காட்டுகிறானென்பது.  இது ஈற்றடிக்கு உள்ளுறை பொருள் (ஸ்வாபதேசம்).

English Translation

The Lord with the conch on his left, the good flute player, went as a messenger and forged the great Bharata war for the sake of the patient kings who lost in games of loaded dice and could not secure even ten villages.  He comes as a child and shows ‘Fear!’ to me, O My, O My!

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain