(2131)

அரியபுல னைந்தடக்கி யாய்மலர்கொண்டு, ஆர்வம்

பரியப் பரிசினால் புல்கில், - பெரியனாய்

மாற்றாது வீற்றிருந்த மாவலிபால், வண்கைநீர்

ஏற்றானைக் காண்ப தெளிது.

 

பதவுரை

அரிய

-

அடக்கமுடியாத

புலன் ஐந்து

-

பஞ்சேந்திருயங்களையும்

அடக்கி

-

கட்டுப்படுத்தி,

ஆய்

-

ஆராயந்தெடுக்கப்பட்ட

மலர்

-

புஷ்பங்களை

கொண்டு

-

கையில் ஏந்திகொண்டு

ஆர்வம் புரிய பரிசினால்

-

அன்பு மிகுந்த விதத்தினாலே

புல்கில்

-

கிட்டப்பார்த்தால்

பெரியன் ஆய் மாற்றாது வீற்றிருந்த மாவலி பால்

-

‘நாமே பெரியோம்’ என்னுமஹங்காரத்தையுடையனாய் தானஞ் செய்வது தவறாதவனாய் இருந்த மஹாபலியிடத்தில்

வண்கை

-

உதாரமான தனது திருக்கையாலே

நீர் ஏற்றானை

-

உதகதாநம் வாங்கின பெருமானை

காண்பது

-

ஸேவிப்பது

எளிது

-

ஸுலபமாகும்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- விஷயாந்தரங்களில் பற்றற்று அன்புடன் அவனை ஆச்ரயிகுமவர்களூக்கு அவனைக் காண்பதில் அருமையேயில்லை யென்கிறார். செவி வாய் கண் மூக்கு உடலென்கிற ஜ்ஞாநேந்திருயங்களைத்தையும் விஷயாந்தரங்களில் போகவொண்ணாதபடி அடக்கி, பகவதாராதனைக்கு உரிய நன்மலர்களைச் சேகரித்துகொண்டு மெய்யன்பு நன்கு விளங்கும்படி சென்று பணிந்தால், மாவலியின் மதமொழித்தபெருமானைக் கண்டநுபவிப்பது மிகவும் எளிதாகும்.

 

English Translation

Those who perform loving service, strewing freshly culled flowers, can see the feet of the Lord who look the gift of Earth from Marbali with ease.

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain