(2129)

கழலொன் றெடுத்தொருகை சுற்றியோர் கைமேல்,

சுழலும் சுராசுரர்க ளஞ்ச, - அழலும்

செருவாழி யேந்தினான் சேவடிக்கே செல்ல,

மருவாழி நெஞ்சே மகிழ்.

 

பதவுரை

ஆழி நெஞ்சே

-

கம்பீரமான மனமே!

[முன்பு திருவிக்ரமாவதார காலத்தில்]

ஒரு கழல்

-

ஒரு திருவடியை

எடுத்து

-

மேலுலகங்களிலே செல்ல நீட்டி

ஒரு கை

-

ஒரு திருக்கையாலே

சுற்றி

-

[பிரதிகூலரான நமுசி முதலானவர்களைச்] சுழற்றியெறிந்து

ஓர் கை மேல்

-

மற்றொரு திருக்கையிலே.

சுழலும் சுராசுரர்கள் அஞ்ச அழலும்செரு ஆழி ஏந்தினான்

-

இவனுக்கு என்ன நேரிடுமோ வென்று) தவிக்கிற [அநுகூலரான] தேவர்களும் [பிரதிகூலரான] அசுரர்களும் அஞ்சும்படியாக [எதிரிகளின் மேல்] அழலையுமிழ்கிற யுத்தசாதநமான சக்கரத்தை ஏந்தின எம்பெருமானுடைய

சே அடிக்கே செல்ல

-

திருவடிகளிலே சென்று கிட்டும்படி

மருவு

-

பொருந்துவாயாக;

மகிழ்

-

இதை ஆனந்தரூபமாக ஏற்றுக்கொள்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- உலகளந்த பெருமானுடைய திருவடிகளைப் பணிந்து மகிழ்ந்திரு என்று திருவுள்ளத்தைத் தேற்றுகின்றார்.

 

English Translation

With one foot, he scooped up Namushi; with one hand, swirled him in the air; then with the other hand he spun his discus that gods and Asuras around feared. O Good Heart of mine! Desire to attain his feet and rejoice.

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain