nalaeram_logo.jpg
(100)

நாறிய சாந்தம் நமக்கிறை நல்கென்ன

தேறி அவளும் திருவுடம் பில்பூச

ஊறிய கூனினை உள்ளே யொடுங்கஅன்று

ஏற வுருவினாய் அச்சோ வச்சோ எம்பெரு மான்வாரா அச்சோ வச்சோ.

பதவுரை

நாறிய

-

‘நல்லவாசனை வீசுகின்ற

சாந்தம்

-

சந்தனத்தை

நமக்கு

-

எங்களுக்கு

இறை

-

கொஞ்சம்

நல்கு என்ன

-

கொடு என்று (நீ) கூனியைக் கேட்க

அவளும்

-

அந்தக் கூனியும் (‘இவர்கட்குக் கொடுத்தால் நம்மைக் கம்ஸன் தண்டிப்பனோ?’ என்று அஞ்சாமல்)

தேறி

-

மனம் தெளிந்து

திருஉடம்பில்

-

(உனது) திருமேனியிலே

பூச

-

சாத்த

ஊறிய

-

வெகுநாளாயிருக்கிற

கூனினை

-

(அவளுடைய) கூனை

உள்ளே

-

(அவள்) சரீரத்திற்குள்ளே

ஒடுங்க

-

அடங்கும்படி

அன்று

-

அக்காலத்திலே

ஏற

-

நிமிர்த்து

உருவினாய்

-

உருவினவனே!

அச்சோ அச்சோ-;

எம்பெருமான்! வந்து அச்சோ அச்சோ.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

*** - அக்ரூரன் கம்ஸனது கட்டளையினாலே கண்ணபிரானை மதுரைக்கழைக்க கண்ணன் கம்ஸனைக் கொல்ல நினைத்துப் பலராமனுடன் புறப்பட்டு மதுரையிற் புகுந்து நடுவழியில் ஒரு துஷ்ட  வண்ணானைக் கொன்று அவனிடமிருந்த சிறந்த ஆடைகளை யெடுத்துச் சாத்திக்கொண்டு ராஜவீதியில் எழுந்தருளுகிற வளவிலே சந்தநத்தைக் கையிலேந்தி வருகிற கூனி யொருத்தியைக் கண்டு ‘அம்மே! நமக்கும் நம் அண்ணர்க்கும் பூசலராம்படி சந்தகம் கொடுக்க வல்லையோ?’ என்று கேட்க அவளும் கண்ணபிரான் திருக்கண்களால் மனமிழுப்புண்டு மறுக்கமாட்டாமல் ‘வெண்ணெயிலே பழகிய இவர்கள் சந்தநத்தின் வாசி அறிவார்களோ’ என்று மட்டமான சந்தநங்களைக் காட்ட அவற்றுக்கெல்லாம் ஒவ்வொருகுறை சொல்லிக்கழித்து ‘அண்ணருடம்புக்கும் நம்முடம்புக்கும் ஏற்ற வெகுநேர்த்தியான வாஸனையுடைய சந்தநத்தில் சிறிது தாம் என்று விரும்பிச்சொல்ல அவளும் இவன் சந்தநத்தின் வாசியறிந்தபடியையும் விரும்பின சீர்மையையும் வடிவழகையும் கண்டு மகிழ்ந்து ‘கம்ஸனுக்குக் கொண்டு போகிற இதை இவர்களுக்குத் தந்தால் தண்டனை நேருமே’ என்றும் அஞ்சாமல் உள்ளந்தேறி உத்தமமான சந்தனத்தை யெடுத்து ‘இதைத் திருவுள்ளம்பற்றுங்கள்’ என்று ஆதரத்தோடு ஸமர்ப்பிக்க அப்பூச்சைத் திருமேனியிலணிந்து கொண்ட கண்ணபிரான் இவள் ‘அநந்யப்பிரயோஜகமாய்க் கிஞ்சித்தரித்தாள்’ என்று உகந்து அவள் முதுகில் வேர்விழுந்ததோ வென்னும்படி உறைத்துக் கிடந்த கூனை நிமிர்த்துவிடக் கடவோமென்று திருவுள்ளம்பற்றி நடுவிரலும் அதற்கு முன்விரலும் கொண்ட நுனிக்கையினாலே அவளை மோவாய்க்கட்டையிற் பிடித்துத் தன் திருவடிகளினால் அவள் கால்களை அமுக்கியிழுத்துத் தூக்கிக் கூன் சரீரத்துக்குள் அங்கி விடும்படி கோணல் நிமிர்த்தி அவளை மகளிரிற் சிறந்த உருவினளாக்கினனென்ற வரலாறு காண்க.

English Translation

My Lord, you asked for some Sandal paste from a hunch-back woman; she too obliged and smeard it on you.  In return you removed her hunch and straightened her back.  Come Acho, Acho!

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain