(2001)

கள்ளத்தால் மாவலியை மூவடிமண் கொண்டளந்தான்,

வெள்ளத்தான் வேங்கடத்தான் என்பரால் காணேடீ,

வெள்ளத்தான் வேங்கடத்தா னேலும், கலிகன்றி

உள்ளத்தி னுள்ளே உலன்கண்டாய் சாழலே.

 

பதவுரை

ஏடீ

தோழீ!

கள்ளத்தால்

கபடவேடித்தினால்

மாவலியை

மாவலியிடத்தில்

மூ அடி மண் கோண்டு

மூன்றடிமண்ணை இரந்து பெற்று

அளந்தான்

அளந்துகொண்டவன்

(ஒருவர்க்கும் எளியவனாகாதபடி)

வெள்ளத்தான்

திருப்பாற்கடலிலே உள்ளான்

வேங்கடத்தான்

திருமலையிலே உள்ளான்

என்பர்காண்

என்று சொல்லுகிறார்களன்றோ?

சாழலே

தோழீ!

வெள்ளத்தான் வேங்கடத்தான் ஏலும்

திருப்பாற்கடலிலும் திருமலையிலும் அருமைப்படவுள்ளவனே யாகிலும்

கலிகன்றி

கலியனுடைய

உள்ளத்தின் உள்ளே

ஹ்ருதயத்தினுள்ளே

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- தோழீ! நீ உகக்கும் பெருமான் பிரமாணிகனல்லன்; க்ருத்ரிம வேஷத்தாலே மாவலி பக்கலில் மூவடிமண் வாங்கி மூவுலகுமளந்தவனாகையாலே நயவஞ்சகன்; அது கிடக்கட்டும் ஒருவர்க்கும் சென்று கிட்டவொண்ணாதபடி எங்கேயோ திருப்பாற்கடலிலும் திருவேங்கடமலையிலும் இருப்பவனாகச் செல்லுகிறார்களேயன்றி ஸந்நிஹிதனல்லனேயென்ன தோழீ! இவ்வளவேயோ நீயறிந்தது? திருமங்கையாழ்வாருடைய திருவுள்ளத்திலே வந்து வஸிப்பதற்கு உபாயாநுஷ்டாநம் செய்கிறபடியாகவன்றோ அவன் திருப்பாற் கடலிலும் திருமலையிலும் வஸித்தது; இப்போது அவ்விடங்களையெல்லாம் விட்டு ஆழ்வாருடைய திருவுள்ளத்திலே ஸந்நிஹிதனாயுளன்காண்க என்கிறாள்.

ஸம்வாதமுகத்தாலே இங்ஙனே குணாநுபவம் செய்வதே ஆழ்வார்க்குப் பரமபோக்யமாயிருந்ததனால் பலச்ருதியில்லாமலே இத்திருமொழி தலைகட்டிற்றாயிற்று.

 

English Translation

"Aho, Sister! By the deceit he practised in measuring three strides of land, they say he resides in the Ocean of Milk and in Venkatam, see!".

"Though residing in the ocean of Milk and in Venkatam, he resides permanently in the heart of Kalikanri also, So tally!".

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain