(2000)

கண்டார் இரங்கக் கழியக் குறளுருவாய்,

வண்தாரான் வேள்வியில் மண்ணிரந்தான் காணேடீ,

வண்தாரான் வேள்வியில் மண்ணிரந்தா னாகிலும்

விண்டே ழுலகுக்கும் மிக்கான்காண் சாழலே.

 

பதவுரை

ஏடீ

தோழீ!

கண்டார்

பார்த்தவர்களெல்லாரும்

இரங்க

மனமிரங்கும்படி

கழிய குறள் உரு ஆய்

மிகக் குள்ளவடிவுடையவனாய்க் கொண்டு

வண்தாரான்

வள்ளல்தனத்தைக் காட்டுகின்ற தனிமாலையையணிந்த மாவலியினுடைய

வேள்வியில்

யாகபூமியிலே

மண் இரந்தாண் காண

மண்ணையாசித்தானன்றோ

சாழலே

தோழீ!

வண்தாரான் வேள்வியில் மண் இரந்தான் ஆகிலும்

விண்டு

விஷ்ணுவாய்

ஏழ் உலகுக்கும் மிக்கான் காண்

எல்லாவுலகத்தினும் மேம்பட்டவன் காண்

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- ஈற்றடியில் வண்டு என்றது ‘விஷ்ணு’ என்ற வடசொல்லின் விகாரமாகவுமாம் ‘விள்’ என்னும் வினைப்பகுதி யடியாப்பிறந்த வினையெச்சமாகவுமாம்.

 

English Translation

"Aho, Sister! it was a pitiable sight, -he come as a small manikin to the generous Mabali;s sacrifice and begged for a piece of land, see!".

"But though he begged for a piece of land in the generous Mabali;s sacrifice, he cannot be contained even by the seven worlds, so tally!".

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain