(1999)

பார்மன்னர் மங்கப் படைதொட்டு வெஞ்சமத்து,

தேர்மன்னர்க் காயன்று தேரூர்ந்தான் காணேடீ,

தேர்மன்னர்க் காயன்று தேரூர்ந்தா னாகிலும்,

தார்மன்னர் தங்கள் தலைமேலான் சாழலே.

 

பதவுரை

ஏடீ

தோழீ!

அன்று

பாரதப்போர்நிகழ்ந்த அக்காலத்தில்

பார்

பூமியிலுள்ள

மன்னர்

அரசாகள் யாவரும்

மங்க

மாளும்படியாக

வெம் சமத்து

வெவ்விய போர்க்களத்திலே

படைதொட்டு

(பிரதிஜ்ஞைக்குமாறாக)ஆயுதமெடுத்து

தேர்மன்னற்கு

தேர்வீரனான அரிஜுனனுக்கு

ஆய்

துணையாய்(ஸராதியாகி)

தேர் ஊர்ந்தான் காண்

தேரைநடத்தினான் காண்.

சாழலே

தோழீ!

தேர் மன்னற்கு ஆய் அன்று தேர் ஊர்ந்தான்

தார் மன்னர் தங்கள்

வெற்றி மாலைபுனையும் அரசர்களுக்கெல்லாம்

தலை மேலான்

தலைமேல் வீற்றிருப்பவன் காண்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- தோழீ! நீ உகக்கும் பெருமான் மெய்யனுமன்று; மேனாணிப்புடையவனுமன்று; பாரதப்போரில் ஆயுதமெடுப்பதில்லை யென்று பிரதிஜ்ஞை செய்துவைத்து ஆயுதத்தை யெடுத்தான்; அஃது எப்படியாயினுமாகுக் எல்லாருங் காணும்படி யுத்த பூமியிலேதான் தேர்ப்பாகனாய் நின்று இழிதொழிலைச் செய்தானே; இது தகுதியோ? என்ன் “ராஜாதிராஜ்! ஜா;வேஷாம்” என்கிறபடியே, அரசாக்ளென்று மார்பு நெறிந்திருப்பாரெல்லார்தலையிலும் ஏறி வீற்றிருக்கும்படியான பெருமைவாய்ந்த அப்பெருமான் பார்த்தன் தன் தேர்முன் நின்று பெருங்குணத்தை வெளியிட்டுக்கொண்டானத்தனை என்று அறியமாட்டிற்றிலையோ! என்று மற்றொருத்தி மறுமொழி கூறினாளாயிற்று.

 

English Translation

"Aho, Sister! Killing the haughty kings in a terrible war when the charioteered kings took up arms and fought, he served as a chariot-driver, see!".

"But though he served as a chariot-driver for the charioteered kings, the victorious ones worshipped him with his feet on their heads, so tally!".

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain