(1998)

கோதைவேல் ஐவர்க்காய் மண்ணகலம் கூறிடுவான்,

தூதனாய் மன்னவனால் சொல்லுண்டான் காணேடீ,

தூதனாய் மன்னவனால் சொல்லுண்டா னாகிலும்,

ஓதநீர் வையகம்முன் உண்டுமிழ்ந்தான் சாழலே.

 

பதவுரை

ஏடீ

தோழீ!

கோதை வேல் ஐவர்க்கு ஆய்

(அரசர்க்குரிய) பூமாலையையும் வேற்படையையும் உடையவரான பஞ்சுபாண்டவர்களுக்கு விதேயனாய்

மண் அகலம் கூறு இடுவான்

குரு பாண்டவாகட்குப் பூமியைப் பங்கிட்டுக் கொடுத்து சந்தி செய்வதற்காக

தூதன் ஆய்

தூதுசென்றவனாய்

மன்னவனால்

துரியோதனனென்னும் அரசனாயல்

சொல் உண்டான் காண்

இழிவான சொற்களைச்சொல்லப் பெற்றானன்றோ?

சாழலே

தோழீ!

தூதன் ஆய் மன்னவனால் கொல்லுண்டான் ஆகிலும்

முன்

முன்பொருகால்

ஓதம் நீர் வையகம்

கடல் சூழ்ந்த உலகத்தையெல்லாம்

உண்டு உமிழ்ந்தான்

(பிரளயங்கொள்ளாதபடி) வயிற்றிலே வைத்து நோக்கி வெளிப்படுத்தினான்காண்க.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- தோழீ! நீ உகக்கும் பெருமான் எல்லார்க்கும் மேம்பட்டவனாகவன்றோ இருக்கவேண்டும்? அவன் அப்படி யிருந்தானாகில் பிறர்க்கு இழிதொழில்செய்து திஜீவனோ பஞ்சபாண்டவர்களுக்கு அரசுரிமை பெறுவித்தற்பொருட்டுப் ‘பரண்டவதூதன்’ என்று பெயர்சுமந்து துரியோதனாதிகளிடத்தில் தூது நடந்தான்; அங்ஙனே நடந்தவிடத்திலே அந்தத் துரியோதனனால் இழிவான வார்த்தைகளைச் சொல்லப்பெற்றான்; இவனையோ நீ பரமபுருஷனென்று கொண்டாடுவது? என்ன் அதற்கு மறுமொழி கூறுகின்றாள் மற்றொருத்தி; - பாண்டவாக்ட்குத் தூது நடந்ததும் மன்னவனால் சொல்லுண்டதும் மெய்யே; இவற்றையேயோ நீ பார்ப்பது; கடல்சூழ்ந்த வுலகங்களையெல்லாம் முன்பு பிரளயங் கொள்ளாதபடி திருவயிற்றினுள் வைத்துப் பிறகு வெளிப்படுத்தினவன் இவனே என்கிற பெருமையை அறிந்திலைபோலுமென்கிறாள்.

கோதை=அரசர்க்கு லக்ஷணமான பூமாலையைச் சொன்னபடி; அரசுரிமையை இழந்திருந்த பாண்டவர்கட்கு அப்பேவாது பூமாலையில்லையாகிலும் அதனை அணிவதற்குரிய ஸ்வரூப யோக்யதையைக் கொண்டு இங்கு இவ்விசேஷணமிட்டபடி.

 

English Translation

"Aho, Sister! For the sake the five Pandava princes he went as a messenger seeking a stretch of land, and ate words of abuse from the king Duryodhana, See!".

"But though he ate, words of abuse from the king, he also swallowed the ocean-girdled world and brought if out during the deluge, so tally!".

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain