(1995)

அறியாதார்க் கானாய னாகிப்போய், ஆய்ப்பாடி

உறியார் நறுவெண்ணெ யுண்டுகந்தான் காணேடீ

உறியார் நறுவெண்ணெ யுண்டுகந்த பொன்வயிறுக்கு,

எறிநீ ருலகனைத்து மெய்தாதால் சாழலே.

 

பதவுரை

ஏடீ

தோழீ!

அறியா தார்க்கு

ஒன்றுமறியாதவர்களுக்குள்ளே

ஆன் ஆயன் ஆகி

மாடுமேய்க்குமிடைக்குலத்தவனாய்

ஆய்ப்பாடி

இடைச்சேரியிலே

உறி ஆர்

உறிகளிலே பொருந்தின

நறு வெண்ணெய்

மணம்மிக்க வெண்ணெயை

உண்டு

(களவுசெய்து) உட்கொண்டு

உகந்தான் காண்

ஸந்தோஷதித்தான் காண்

சாழலே

தோழீ!

உறி ஆர் நறுவெண்ணெய் உண்டு உகந்த

உறிகளிலே பொருந்திய நறுவெண்ணெயை உட்கொண்டு உவந்த

பொன் வயிற்றுக்கு

திருவயிற்றுக்கு

எறி நீர் உலகு அனைத்தும்

கடல்சூழ்ந்த லோகங்களெல்லாம்

எய்தாது

போதாது

ஆல்

ஆச்சரியம்

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- திருவாய்ப்பாடியில் கண்ணபிரான் தயிர்வெண்ணெயுண்ட வரலாற்றிலே ஆழ்வார்களெல்லாரும் மிக ஈடுபாடுடையவராதலாலும் இவ்வாழ்வார்தாமும் அதிலே விசேஷமான ஈடுபாடுடையராதலாலும் கீழ்ப்பாட்டின் ப்ரமேயமே இப்பாட்டிலும் பொலிய நிற்கிறது. ஆறியாதர்க்கு ஆனாயனாகி ஸ்ரீ ஸர்வஜ்ஞனான எம்பெருமான் அறிவில்லாதவொரு சன்மத்திலே பிறக்கவேணுமென்று நினைத்தால் இடக்கையும் வலக்கையுங்கூட அறியமாட்டாதபடி அறிவுகேட்டுக்கு எல்லை நிலமான இடைக்குலத்திலே தான் பிறக்க வேணுமோ? அறியாதர்க்கு-அறிவில்லாதவாக்ளுக்குள்ளே, ஆனாயனாகி-கடைகெட்ட இடையனாகி. (இங்குப் பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானத்தில் சில ப்ரசேஷப உத்சேஷபங்கள் இருப்பதை ஏட்டுப்பிரதிகளைக் கொண்டு திருத்திக்கொள்க.)

 

English Translation

"Aho, Sister Going to Aippadi, he became a cow-grazer amid innocent folk, and enjoyed himself eating butter from the rope-shelf by stealth, see!".

"Yes, but even the seven worlds and seven seas can not fill the golden stomach that ate butter from the rope-self, so tally!".

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain