(1959)

மால்இ னந்துழாய் வருமென் னெஞ்சகம்,

மாலின் அந்துழாய் வந்தென் னுள்புக,

கோல வாடையும் கொண்டு வந்தது,

ஓர் ஆலி வந்ததால் அரிது காவலே.

 

பதவுரை

என் நெஞசகம்

-

எனது நெஞ்சானது

மால்இனம்

-

(அப்பெருமான் பக்கலுண்டான)  வியாமோஹத்திற்குத் தகுதியாக

துழாய் வரும்

-

அலைந்துகொண்டு வாரா நின்றது

மாலின்

-

(அந்த) எம்பெருமானுடைய

அம் துழாய்

-

அழகிய திருத்துழாய் மாலையானது

என்னுள் வந்து புகளுதல்

-

என்னுடைய நினைவுக்குவர

வந்தது ஓர் ஆலி

-

(ஏற்கெனவே தனியே) வந்துபார்த்துப்போனவொரு சிறு துளியானது

கோலம்

-

அழகிய

வாடையும்

-

வாடைக்காற்றையும்

கொண்டு வந்தது

-

துணைகூட்டிக்கொண்டு வந்துவிட்டது.

ஆல்

-

அந்தோ! (இனி)

காவல்

-

(உயிரைக்) காப்பாற்றிக் கொள்

அரிது

-

முடியாதகாரியம்

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- ‘எநெஞசகம் மால் இனம் துழாய்வரும்’ என்று முதலடியைப் பிரித்து அந்வயிப்பது. என்னுடைய நெஞ்சானது தான் கொண்டிருக்கிற வியாமோஹத்திற்குத் தகுதியாகக் கவலைகொண்டிருக்கின்றது என்றபடி. துழாய் - துழாவி “கடலும் மயலயம் விசும்புந்துழாய்” என்ற திருவாய்மொழிப் பிரயோகமுங்காண்க. இனி இரண்டாமடியை, ‘மாலின் அம் துழாய்வந்து என் உள்புக’ என்று பிரிந்து அந்வயிப்பது. அந்த எம்பெருமானுடைய அழகிய திருத்துழாயானது எனது உள்ளத்தில்புக (அதாவது) அத்திருத் துழாயை நான் நெஞ்சால் நினைத்தமாத்திரத்திலே என்றபடி. (வந்ததோர்ஆலி கோல வாடையுங் கொண்டு வந்ததால்) ஆலியாவது சிறுதுளி. (மழைத்துளி). இதுவிரஹிகளுக்கு உத்தீபக மெனப்படும். இது ஏற்கெனவே வந்து என்னை நலிவதற்கு நிலம்பார்த்துப் போயிற்று; தகுந்த துணைகூட்டிக்கொண்டு வந்து நலியவேணுமென்று பண்டேபார்த்துப் போயிற்று; அது இப்போது வாடைக்காற்றைத் துணைகொண்டு வந்திட்டது இனி என்னைக் காத்துக்கொள்ளுதல் எளிதன்று என்கிறாள்.

 

English Translation

My heart was searching for the Lord everywhere, when his cool Tulas garland came along with a fragrarii breeze and entered me.  A wee bit of if stuck in my like a thorn, Alas, it is impossible to save myself now.

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain