(1958)

பூவை வண்ணனார் புள்ளின் மேல்வர,

மேவி நின்றுநான் கண்ட தண்டமோ,

வீவி லைங்கணை வில்லி யம்புகோத்து,

ஆவி யேயிலக் காக எய்வதே.

 

பதவுரை

ஐங்கணை வில்லி

-

மன்மதனானவன்

வீவு இல்

-

இறைப்பொழுதும் ஓய்வில்லாமல்

அம்பு கோத்து

-

பாணங்களைத் தொடுத்து

ஆவியே இலக்கு ஆக எய்வது

-

என் உயிரையே லஷயமாகக் கொண்டு பிரயோகிப்பதானது

பூவை வண் ணனார்

-

காயம்பூவண்ணரான பெருமாள்

புள்ளின் மேல் வர

-

பெரிய திருவடியின் மீது எழுந்தருள

நான்மேவி நின்று

-

நான் விரும்பி நின்று கொண்டு

கண்ட தண்டமோ

-

கண்டதற்கான தண்டனையோ

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- பஞ்சபாணனாகிய மன்மதன் தனது கரும்புவில்லிலே மலரம்புகளைத் தொடுத்து என் ஆவியையே இலக்காகக் கொண்டு பிரயோகிப்பதானது, எம்பெருமான பெரிய திருவடியின் மீது எழுந்தருள ஒருகால் நான் ஸேவிக்கப் பெற்றதற்கு இட்ட தண்டனையோ என்கிறாள். பகவத் விஷயத்தில் ஆசைகொள்ளாதர்க்குக் காமவேதனை கிடையாதென்றும், பகவத் விஷயத்தில் ஈடுபட்டது காரணமாகவே தமக்கு இக்காமநோய் உண்டாயிற்றென்றும் தெஜீவித்தாராயிற்று. பூவை -காயாம்பூவில் ஒருசாதியென்பர்.

 

English Translation

I stood and watched longingly as the kaya-hued Lord came riding Garuda bird, Is this my punishment, ;that Madana the god of love, keeps; piercing my soul with his flower-arrows constantly?

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain