(1956)

அங்கொ ராளரி யாய்,அவுணனைப்

பங்க மாவிரு கூறு செய்தவன்,

மங்குல் மாமதி வாங்க வேகொலோ

பொங்கு மாகடல் புலம்பு கின்றதே.

 

பதவுரை

அங்கு

-

ப்ரஹிலாதாழ்வான் எங்குமுளன்

கண்ணன் என்று சொன்ன வப்பொழுதே

ஆள் அரிஆய்

-

நரஸிம்ஹ மூர்த்தியாக தரித்து

அவுணனை

-

(இரணியமென்னும்) அசுரணை

பங்கம் ஆ

-

மானபங்காக்கி

இரு கூறு செய்தவன்

-

இருதுண்டமாகக் கிழித்த பெருமான்

மங்குல்மாமதி

-

ஆகாசத்திலே விளங்குகின்ற

சிறந்த சந்திரனை

வாங்கவே கொலோ

-

(தன்னிடத்தில் நின்றும்)

அபஹாரித்ததனாலேயோ

பொங்குமா கடல்

-

திரைக்கிளப்பத்தையுடைய கருங்கடலானது

புலம்புகினறது

-

கோஷிக்கின்றது!

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- விரஹிகளுக்குக் கடலோசையும் பாதகமாகையாலே அதற்கு நோவுபட்டுச் சொல்லுகிறாள். இக்கடல் ஏதுக்கு இங்ஙனே புலம்புகின்றது? என்று ஆராய்ந்து பார்த்தாள் எம்பெருமான் இக்கடலிடத்தில் நின்றும் மாமதியை வாங்கிவிட்டதனாலேயே இது இங்ஙனே புலம்புகின்றது! என்று தன்னில்தான் அநுமானித்துச் சொல்லிக்கொள்ளுகிறாள்.

இங்கு மாமதி என்றது சிலேடை  (இரண்டு பொருள்பட நின்றது) நல்ல புத்தி என்று ஒரு பொருள்; சந்திரன் என்று மற்றொரு பொருள். நல்ல புத்தியிருந்தால் இக்கடல் இங்ஙனே புலம்பமாட்டாது; மதியைரியழந்ததனாலாயிற்று இங்ஙனே புலம்புகின்றது! என்று ஒரு சமத்காரமாகச் சொல்லுகிறபடி. மதியையிழந்தது மெய்யோ? என்னில் எம்பெருமான் அமர்ர்களுக்காக இக்கடலைக் கடைந்தருளின காலத்தில் “?????” “சஸவஸாவிஷாஹூயாஸிய{வானிஜாதனுக்ஷதாநாவணதொ ஜயிஸூவஸ்ரீஅச்வரப்ஸரோவிஷஸூதாவிது பாரி ஜாத லசஷ்ம்யாத்மநா பாரிணதொ ஜலதிர்ப் பபூவ.” (அதிமாநுஷஸ்தம்) என்கிறபடியே ஐராவதயானை, உச்சைச்ரவஸ் என்னுங் குதிரை, காலகூட விஷம், அமுதம் கல்பவிருசஷ்ம், லசஷ்மி முதலிய பதார்த்தங்களுடனே மதியும் வெளிப்பட்டதிறே. (மதி-சந்திரன்).

இங்கே வியாக்கியான வாக்கியங்கள் காண்மின் - “தன்னை நெருக்கிக் கடைந்து உள்ளுண்டான மதியை வாங்குகையோ இக்கடல் இங்ஙனே கிடந்து கூப்பிடுகிறது!; என்னைப்போல மதியிழந்தோ இக்கடலுங் கூப்பிடுகிறது!  மதியெல்லா முள்கலங்கியிறே இவளுங் கிடக்கிறது! ஓன்றுக்கும் விகரதையாகாத நான் கலங்கிக் கூப்பிடுகிறாப்போலேயிருந்ததீ! இக்கடலும் தன் காம்பீர்யமெல்லாம் அழிந்து கூப்பிடுகிறபடியும்.”

 

English Translation

Once he came as a man-lion, and fore apart the chest of Hiranya.  Is it because  the tender Moon has escaped into the sky that the ocean sends out a rending roar?

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain