(1954)

சங்கு மாமையும் தளரு மேனிமேல்,

திங்கள் வெங்கதிர் சீறு மென்செய்கேன்,

பொங்கு வெண்டிரைப் புணரி வண்ணனார்,

கொங்க லார்ந்ததார் கூவு மென்னையே.

 

பதவுரை

சங்கும்

-

கைவளைகளும்

மாமையும்

-

நிறமும்

தளரும்

-

சோர்ந்திருக்கப்பெற்ற

மேனிமேல்

-

(எனது) உடம்பின்மேலே

திங்கள்

-

சந்திரனுடைய

வெம் கதிர்

-

கொடிய கிரணங்களானவை

சீறும்

-

சீறுகின்றன

பொங்கு வெண்திரை புணாரிணனார்

-

கிளர்கின்ற வெளுத்த அலைகளை

யுடைய கடல் போன்ற நிறவண முடையரான பெருமாளுடைய

கொங்கு அலர்ந்ததர்

-

பரிமளம் விரிகின்ற திருத்தழாய்

மாலையானது

 

என்னை கூவும்

-

என்னோடே போர் செய்ய அறை

கூவாநின்றது

 

என் செய்கேன்

-

என்ன பண்ணுவென்!-.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கையில் வளைகளும் தங்கமாட்டாதே நிறமும் நிலை நிற்கமாட்டாதே மாறும் படியாய்த் தளர்ந்து கிடக்கின்ற எனது உடம்பின்மேலே சந்திரன் தானும் தனது நெருப்புப் போன்ற நிலாவையிட்டு நிக்ரஹிக்கின்றானே! இதற்கென் செய்வேன்! இவ்வளவேயோ! இன்னமும், கடல்வண்ணருடைய திருத்துழாய் மாலையும் மார்பு நெறித்து வந்து ‘என்னோடே ஒரு கைபார்க்கவல்லையோ?’ என்ற அறை கூவுகின்றதே! இதற்குத்தான் என் செய்வேனென்கிறாள்.

விரஹிணிகட்கு நிலா பாதகமென்பது “மேவுதண்மதியம் வெம்மதியமாலோ” என்ற திருவாய்மொழியாலும் விளங்கும்.

“கொங்கலார்ந்த தார் கூவும்” என்றதன் கருத்து யாதெனில்; “தோளைணை மேலும் நன்மார்பின் மேலும் சுடர் முடிமேலும், தாளிணை மேலும் புனைந்த தண்ணந்துழாயுடையம்மான்” என்கிறபடியே அவயவங்கள் தோறும் அப்பெருமான் திருத்துழாய் மாலை அணிந்துகொண்டிருக்குமழகை ஆராயுங்கால், ஸ்த்ரீத்வத்திற்குத் தக்கபடி உள்ளே பதுங்கி நிற்க வேண்டிய அடக்கத்தையும் அப்பால் தள்ளிவிட்டு வீதியேறப் புறப்பட்டுச்சென்றாகிலும் கண்டு களிப்பதே கருமம் என்று துணிவு உண்டாகின்றதே யென்றவாறு. “காரிகையார் நிறைகாப்பவர் யாரென்று கார்கொண்டின்னே மாரி கையேறி அறையிடுங்காலத்து” என்ற திருவிருத்தத்தை அடியொற்றி “கூவும்” என்பதற்குக் கருத்துக்கொள்க.

 

English Translation

My bangles have slipped, my colour has drained.  The rays of the Moon singe me angrily, what can I do? The Lord of dark ocean hue wears a fragrant Tulasi garland which keeps calling to me!

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain