(1952)

குன்ற மொன்றெடுத் தேந்தி,

மாமழை அன்று காத்தவம் மான்,

அ ரக்கரை வென்ற வில்லியார் வீர மேகொலோ,

தென்றல் வந்துதீ வீசு மென்செய்கேன்.

 

பதவுரை

அன்று

-

முன்பொருகால்

குன்றம் ஒன்று

-

(கோவர்த்தனமென்கிற) ஒருமலையை

எடுத்து

-

(குடையாக) உயரவெடுத்து

ஏந்தி

-

(ஏழுநாள் ஓய்வின்றிப்) பிடித்துக் கொண்டிருந்து

மா மழை

-

(இந்திரன் பெய்வித்த) பெரு மழையில் நின்றும்

காத்த

-

(அடியார்க்ளைக்) காப்பாற்றி யருளின

அம்மான்

-

ஸ்வாமியும்

அரக்கரை

-

ராக்ஷஸாக்ளை

வென்ற

-

கொன்றொழித்த

வில்லியார்

-

வில்லையுடையருமான பெருமாளுடைய

வீரமே கொலோ

-

பராக்ரமத்தினாலோ

தென்றல் வந்து தீ வீசும்

-

தென்றற்காற்று வந்து நெருப்பை வீசுகின்றது!

என் செய்கேன்

-

(இதற்கு) என்ன பண்ணுவேன்!

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***-  (தென்றல்வந்து தீ வீசும்: (இது) ஞ்.வில்லியார்வீரமே கொலோ) தென்றலோவென்னில் பொதுவாக எல்லார்க்குங் குளிர்ச்சியைப் பண்ணாநின்றது; அதுதானே என்னளவில் நெருப்பை உமிழாநின்றால் இது தனக்கு ஒரு ஹேது இருக்கவேணுமே; குன்றெடுத்து மழைதடுத்து, வி;ல்லெடுத்து அரக்கரை மடித்தவர் இந்திரனிடத்திலும் அரக்காரிடத்திலும் காட்டின வீர;யத்தை என்னிடத்திலுங் காட்டவேண்டி இத்தென்றலைத் தீ வீசுமாறு ஏவினா; போலும்; “ரிஷாஹாதுதாவதெ” என்ற உபநிஷத்தின்படி அவர்க்கு அஞசி நடுங்கி உலாவக்கடவதன்றோ காற்று; அது தீ வீசும்போதைக்கு அவருடைய ஸங்கல்பமே அடியாயிருக்கவேணுமிறே என்கிறாள்.

 

English Translation

The Lord lifted a mountain and stopped the rains. He is the bow-wielder who destroyed the Rakshasas.  Alas! The breeze fans my love fire. Is this any sign of his valour? I do not know!

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain