(1789)

தாதவிழ் மல்லிகை புல்லிவந்த தண்மதி யினிள வாடையின்னே

ஊதை திரிதந் துழறியுண்ண ஓரிர வுமுறங் கேன் உறங்கும்

பேதையர் பேதைமை யாலிருந்து பேசிலும் பேசுக பெய்வளையார்

கோதை நறுமலர் மங்கைமார்வன் குறுங்குடிக் கேயென்னை யுய்த்திடுமின்.

 

பதவுரை

தாது அவிழ் மல்லிகை

-

தாதுகள் விரிகிற மல்லிகைகளிலே

புல்கி

-

போய் அணைந்து

தண் மதியின்

-

குளிர்ந்த சந்தியனோடுகூட

இன்னே வந்த

-

இப்படிவந்து வீசுகின்ற

இளவாடை

-

மந்தமாருதமாகிற

ஊதை

-

குளிர்காற்றானது

திரிதந்து

-

இங்குமங்கும் உலாவி

உழறி உண்ண

-

துகைத்துமுடிக்க

ஓர்இரவும்

-

ஒரு ராத்திரியும்

உறங்கேன்

-

உறங்காதிருக்கிறேன்;

பெய் வளையர்

-

கைவளை கழலாதவர்களாய்

உறங்கும் பேதையர்

-

உறக்கமே போதுபோக்கான விவேகமற்ற பெண்கள்

பேதைமையால்

-

தங்கள் அறிவீனத்தினால்

இருந்து

-

வேலையற்றறிருந்து

பேசிலும் பேச்சு

-

(என் விஷயமாக) என்ன பழி சொன்னாலும் சொல்லட்டும்;

(தோழிமார்களே!)

கோதை

-

கூந்தலிலே

நறுமலர்

-

மணமிக்க பூக்களை அணிந்துள்ள

மங்கை

-

மணம்மிக்க பூக்களை அணிந்துள்ள

மார்பன்

-

திருமார்பிலேயுடைய பெருமானது

குறுங்குடிக்கே *** மின்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- மலர்கின்ற மல்லிகைப் பூவிலே தோய்ந்து அங்குள்ள மணம் முதலியவற்றை வாரிக்கொண்டு இங்கே வந்து வீசித் திரிகின்ற குளிர்காற்றானது என்னுயிரை முடிக்கப் பார்க்கின்றது; அதற்கு வருந்தி ஓரிரவும் கண்ணுறங்காதிருக்கின்றேன்; நாயகரைப் பிரிந்தாலுண்டாகும் வருத்தம் இப்படியிருக்குமென்று அடியோடு அறியாத சில பேதைப்பெண்கள் தாங்கள் போதுபோக்கற்று நம்மைப் பற்றிப் பழிப்பாக எது சொல்லினும் சொல்லுக; அவர்கள் பேச்சைக்கொண்டு நமக்கு என்ன? நம்முடைய ப்ராவணத்தைக் குற்றமாகக் கொள்ளாமல் நற்றமாகக் கொள்பவன் வாழ்கிற திருக்குறுங்குடியிலே என்னைக் கொண்டுபோய் விடுங்கள் என்கிறாள்.

இன்னே - இங்ஙனே என்றபடி; வாடை நலிகிறபடியை வாய்விட்டுச் சொல்லமாட்டாமையாலே ;இன்னே; என்னுமித்தனை. ஊதை - குளிர்காற்று; “ஊதையும் கூதையும் குளிர்பனிக்காற்று; என்பது நிகண்டு.

 

English Translation

The cold and damp moonlight breeze, laden with fragrance of pollen-filled, Jasmine blows everywhere, desiccating my soul, leaving me not a single night;s sleep.  Let the insensitive bangled sleepers sit here and speak what inanities they wish to>  The Lord keeps the fragrant coiffured lotus-dame Lakshmi on his chest.  Carry me now to his abode in kurungudi

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain