(1763)

வெஞ்சின வேழம் மருப்பொ சித்த வேந்தர்கொல் ஏந்திழை யார்மனத்தை

தஞ்சுடை யாளர்கொல் யான றியேன் தாமரைக் கண்க ளிருந்தவாறு

கஞ்சனை யஞ்சமுன் கால்வி சைத்த காளையா ரவர்கண் டார்வணங்கும்

அஞ்சன மாமலை யேயு மொப்பர் அச்சோவொருவரழகியவா.

 

பதவுரை

வெம் சினம் வேழம்

-

வெவ்விய சீற்றத்தை யுடைய (குவலயாபீட மென்னும்) யானையினது

மருப்பு

-

கொம்பை

ஒசித்த

-

முறித்தொழித்த

வேந்தர் கொல்

-

பிரபுவோ இவர்!

ஏந்து இழையார்

-

தரிக்கப்படும் ஆபரணங்களை யுடையரான பெண்டிருடைய

மனத்தை

-

நெஞ்சை

தஞ்சு உடையாளர் கொல்

-

தஞ்சமாகவுடையவரோ இவர்!

யான் அறியேன்

-

நான் அறிகின்றிலேன்;

தாமரை கண்கள் இருந்த ஆறு

-

தாமரைபோன்ற திருக்கண்களிருக்கும்படி என்னே!

முன்

-

முன்பு

கஞ்சன்

-

கம்ஸன்

அஞ்ச

-

பயப்படும்படியாக

கால் விசைத்த

-

(தனது) திருத்தாள்களின் வலிமையைக் காட்டின

காளையர் ஆவர்

-

இளையவராக இருக்கின்றார்;

கண்டார் வணங்கும்

-

கண்டவர்களெல்லாரும் வணங்குதற்குரியவராய்

அஞ்சனம் மாமலை யேயும் ஒப்பர்

-

பெரிய வொரு அஞ்சனமலை போன்றிருப்பவரான

ஒருவர்

-

ஒருபெரியவருடைய

அழகிய ஆ

-

ஸௌந்தரியமானது

அச்சோ

-

ஆச்சரியம்!.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- தோழீ! இவரைப் பார்த்தால் முன்பு கம்ஸன் தனது அரண்மனை வாசலில் மதமூட்டி நிறுத்திவைத்த குவலயாபீடமென்னும் யானையை வென்றொழித்த வேந்தர் போலே யிருக்கின்றார்; அவர்தானோ இவர்! ஆபரணங்களை யணிந்திருக்கும் பெண்களுடைய நெஞ்சை ஆச்ரயமாகவுடைய திருமால் தானோ இவர்! இன்னாரென்று நிச்கயிக்கக் கூடவில்லையே.  தாமரைபோன்ற திருக்கண்களிருக்குமழகை என் சொல்வேன்! முன்பு கஞ்சனை மஞ்சத்தினின்று தள்ளித்திருத்தாளாலுதைத்த தனிவீரராகவே இவர் தோற்றுகின்றார்; ‘ந நமேயம்து கஸ்யசித்’ (ஒருவற்கும் தலைவணங்க மாட்டேன்) என்ற இராவணனைப் போன்ற வணங்கா முடிகளும் இவரைக் கண்டவாறே பரவசமாக வணங்கும்படியன்றோ இவருடைய அதிசயமிருப்பது; ஒரு அஞ்சன மலைதான் இங்ஙனே வடிவெடுத்து நிற்கிறதோ! என்னலாம்படி யிருக்கின்றார்காண்.  வாய்கொண்டு சொல்லவொண்ணாத அழகு படைத்த இவர் திறத்திலே நான் என்னவென்று சொல்லுவேன்! என்கிறாள்.

“மருப்பொசித்த வேந்தர் கொல்” என்றும் “ஏந்திழையார் மனத்தைத் தஞ்சுடையாளர் கொல்” என்றுமு் இரண்டு வாக்கியமாக இருந்தாலும் ஒரு வாக்கியமாக இருந்தாலும் ஒரு வாக்கியமாகவே விவக்ஷிதம்; யானையின் கொம்பை முறித்து அந்த வீரச்செயலைக் காட்டிப் பெண்களின் மனத்தைக் கொள்ளை கொண்ட பெருமானோ இவர்! என்றவாறு.  ‘ஏந்திழையார்’ என்று பெண்களுக்கு நிரூபகநாமம், இழை – ஆபரணம்.

 

English Translation

Was he the elephant Vtusk-breaker, the prince who reigns in the hearts of jewelled maidens?  Was he the youthful bull that stamped on Kamsa's chest?  I do not know.  Oh, his lotus eyes!  His frame was a dark mountain that instantly commanded obeisance's. Aho, was he beautiful.

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain