(1761)

வம்பவி ழும்துழாய் மாலை தோள்மேல் கையன ஆழியும் சங்கும் ஏந்தி,

நம்பர்நம் மில்லம் புகுந்து நின்றார் நாகரி கர்பெரி துமிளையர்

செம்பவ ளமிவர் வாயின் வண்ணம் தேவ ரிவர துருவம்சொல்லில்

அம்பவ ளத்திர ளேயு மொப்பர் அச்சோ ஒருவர் அழகியவா.

 

பதவுரை

தோள் மேல்

-

திருத்தோள்களிலே

வம்பு அவிழும் துழாய் மாலை

-

பரிமளம் விஞ்சுகிற திருத்துழாய் மாலையுள்ளது;

ஆழியும் சங்கும்

-

சக்கரமும் சங்கமும்

கையன

-

திருக்கைகளிலுள்ளன;

ஏந்தி

-

(அத்திவ்யாயுதங்களைத்) தரித்துக்கொண்டு

நம்பர்

-

(இந்த) ஸ்வாமி

நம் இல்லம் புகுந்து நின்றார்

-

நம்மனையிலே வந்து ஸுலபராயிரா நி்ன்றார்;

நாகரிகர்

-

பெருமதிப்பராயிரா நின்றார்;

பெரிதும் இளையர்

-

மிக்க இளம்பருவமுடையராயிருக்கின்றார்;

இவர்

-

இவருடைய

வாயின் வண்ணம்

-

அதரத்தின் நிறம்

செம் பவளம்

-

சிவந்த பவளமே;

தேவர் இவரது

-

அமாநுஷரான இவருடைய

உருவம் சொல்லில்

-

உருவமிருக்கும்படியைச் சொல்வோமாகில்

அம் பவளம் திரளேயும் ஓப்பர்

-

அழகிய பவளத்திரள் போலே விரும்பத் தக்கவரா யிரா நின்றார்;

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- தோழீ! அவருடைய பரத்வ ஸௌலப்யங்களைச் சொல்லுகிறேன் கேளாய்; மணங்கமழ்கின்ற திருத்துழாய் மாலையைத் தோளினைமேல் அணிந்துள்ளார்; திருக்கைகளிலே திருவாழி திருச்சங்குகளைப் பூவேந்துமாபோலே ஏந்தியுள்ளார்;  இப்படிப்பட்ட பரத்வங்கொண்டு எட்டாதவராயிருக்கையன்றியே நாமிருக்குமிடத்தே வந்த புகுந்திருக்கின்றார்! பரமரஸிகராயிருக்கின்றார்; கௌமாரங்கலசின யௌவன பருவம் வாய்ந்தவராயிருக்கின்றார்.  இவருடைய திருஅதரத்தின் நிறமோ சிவந்த பவளம்போலிரா நின்றது; தேவாதி தேவராகத் தோற்றமுடையராயிருக்கின்றார்.  திருவுருவமோ பவளத் திரள்போல மிக விரும்பத் தகுந்ததா யிராநின்றது.  உபமான மில்லாதபடி மிகலக்ஷணமான அழகுபடைத்த இவ்விஷயத்திற்கு நாம் உபமானமிட்டுச் சொல்லுவதும் ஹேயமென்னும்படி அழகிற் சிறந்தவர் காண் என்றாளாயிற்று.

கையன ஏந்தி கையிலுள்ளனவாக ஏந்தி என்று முரைக்கலாம்.  நம்பர் – எல்லாராலும் நம்பத்தகுந்தவர்; “நம்பும மேவும் நசையாகுமமே.”

இந்த விபூதியில் வந்து தோன்றினது கொண்டு ‘நம் இல்லம் புகுந்து நின்றா என்றது.  அன்றியே மாநஸாநுபவமாகவுமாம். நாகரிகர் – வடமொழித் தத்திதாந்தநாமம்.

 

English Translation

Wearing a bee-humming Tulasi garland over his shoulders, bearing a conch and discus in his hands, the trusted Lord entered our house.  He looked like a god, exceedingly youthful and decent.  His lips were the hue of red coral.  His whole frame looked like a heap of corals.  Aho, was he beautiful.

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain