(1759)

தோடவிழ் நீலம் மணங்கொ டுக்கும் சூழ்புனல் சூழ்குடந் தைக்கிடந்த

சேடர்கொ லென்று தெரிக்க மாட்டேன் செஞ்சுட ராழியும் சங்குமேந்தி

பாடக மெல்லடி யார்வ ணங்கப் பன்மணி முத்தொடி லங்குசோதி

ஆடகம் பூண்டொரு நான்கு தோளும் அச்சோ ஒருவர் அழகியவா.

 

பதவுரை

தோடு அவிழ் நீலம்

-

இதழ்கள் மலரப்பெற்ற நீலோற்பலங்கள்

மணம் கொடுக்கும்

-

பரிமளத்தைப் புற்ப்பட விடுகின்றன

சூழ் புனல்

-

பரந்த தீர்த்தங்களாலே

சூழ்

-

சூழப்பட்ட

குடந்தை

-

திருக்குடந்தையிலே

கிடந்த

-

திருக்கண்வளர்ந்தருள்கின்ற

சேடர் கொல்என்று

-

யௌவன புருஷரோ இவர்! என்று

தெரிக்கமாட்டேன்

-

தெரிந்து கொள்கின்றிலேன்,

செம் சுடர் ஆழியும்

-

சிவந்த ஒளியையுடை திருவாழியையும்

சங்கும்

-

சங்கையும்

ஏந்தி

-

தரித்துக்கொண்டு,

பாடகம் மெல் அடியார் வணங்க

-

பாதகடகம் பூண்ட மெல்லி பாதங்களையுடைய பெண்டிர்களால் வணங்கப்பெற்ற

பல் மணிமுத்தொடு

-

பலவகைப்பட்ட ரத்னங்களோடும் முத்துகளோடும்

இலங்கு சோதி ஆடகம் பூண்ட

-

விளங்குகின்ற தேஜஸ்ஸையுடைய பொன் திருவாபரணங்களை யணிந்துள்ள

ஒரு நான்கு தோளும்

-

விலக்ஷணமான நான்கு திருத்தோள்களுமாய்

அச்சோ ஒருவர் அழகிய ஆ -.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- தோழீ! இப்பெரியவர் திருக்குடைந்தையிலே திருக்கண் வளர்ந்தருளுகிற யுவா என்னலாம்படி விளங்குகின்றார்; அவர்தானோ இவர்!, நன்றாகத் தெரியவில்லையே.  திருவாழி திருச்சங்குகளைத் திருக்கைகளிலே ஏந்தி யிருக்கின்றார்; இளமகளிர் யௌவந புருஷர்களைச் சுற்றிக் கொண்டிருப்பார்களாகையாலே இவரும் இளமகளிர்களால் சுற்றி வணங்கப் பட்டிருக்கிறார்.  அவர்களது உள்ளம் குளிரும்படி முத்து மயமும் பொன் மயமுமான திருவாபரணங்களை அணிந்துகொண்டிருக்கிறார்; அவர்களை உவந்து தழுவுவதற்கு நான்கு திருத்தோள்களையுடையரா யிருக்கிறார்; இவருடைய அழகோ நம்மால் பேசப்போகாது, இவர் இன்னாரென்று தெரியவில்லையே தோழீ! என்கிறாள்.

“செஞ்சுடராழியுஞ் சங்குமேந்தி” என்று தொடங்கிப் பின்னடிகளை முந்துற அந்வயித்துக்கொண்டு பிறகு முன்னடிகளை அந்வயித்துக் கொள்ளவுமாம்.  திருக்குடைந்தையில் பொய்கைகளெங்கும் நீலமலர்கள் மணங்கமழ்கின்றன வென்பது முதலடியிலுள்ள விசேஷணத்தின் கருத்து.

சேடர் - இளம்பருவமுள்ளவர்; யுவா என்றபடி.  “குடந்தைக் கிடந்த சேடர்கொலென்று தெரிக்கமாட்டேன்” என்றது – இவர் திருக்குடந்தை

யெம்பெருமானோ திருநாகையெம்பெருமானோ தெரியவில்லை என்றபடியன்று; முதற்பாட்டிற் கூறியபடியே மஹாராஜன் போலவும் வைதிக ப்ராஹ்மணோத்தமர் போலவும் காட்சிதருகின்ற இவர் அஸாதாரண லக்ஷணங்களாலே ஸாக்ஷாத் ஸ்ரீமந்நாராயணனா யிருக்கவேணும்போல் தெரிகிறது; பாவிகளான நமக்கு எம்பெருமான் ஸேவை ஸாதிக்கும்படியான பாக்கியம் இருக்குமோ என்று நினைக்குங்கால் எம்பெருமானன்றுபோல் தோற்றுகிறது என்பதாகக் கொள்ளலாம்.

 

English Translation

Was he one of the young men who laze in kudandai surrounded by waters that spread the fragrance of blue water lilies?  I do not know, Bearing a radiant discus and white conch in his hands, wearing many radiant jewels of gems and pearls set in gold, he stood with four arms, worshipped by maidens with tender anklet-feet. Aho was he beautiful.

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain