(65)
கோளரி யின்னுருவங் கொண்டுஅவுணனுடலம் குருதி குழம்பியெழக் கூருகி ரால்குடைவாய்
மீள அவன்மகனை மெய்ம்மை கொளக்கருதி மேலை யமரர்பதி மிக்கு வெகுண்டுவர
காளநன் மேகமவை கல்லொடு கால்பொழியக் கருதி வரைக்குடையாக் காலிகள் காப்பவனே
ஆள எனக்குஒருகால் ஆடுக செங்கீரை ஆயர்கள் போரேறே ஆடுக ஆடுகவே.
பதவுரை
கோன் |
- |
வலிமையையுடைய |
அரியின் |
- |
(நா) சிங்கத்தின் |
உருவம்கொண்டு |
- |
வேஷங்கொண்டு |
அவுணன் |
- |
ஹிரண்யாஸுரனுடைய |
உடலம் |
- |
சரீரத்தில் |
குருதி |
- |
ரத்தமானது |
குழம்பி எழ |
- |
குழம்பிக் கிளரும்படியாகவும் |
அவன் |
- |
அவ்வஸுரனானவன் |
மீள |
- |
மறுபடியும் |
மகனை |
- |
தன் மகனான ப்ரஹ்லாதனை |
மெய்ம்மைகொள கருதி |
- |
ஸத்யவாதியென்று நினைக்கும் படியாகவும் திருவுள்ளம்பற்றி |
கூர் உகிரால் |
- |
கூர்மையான நகங்களாலே |
குடைவாய் |
- |
(அவ்வசுரனுடலைக்) கிழித்தருளினவனே! |
மேலை |
- |
மேன்மைபொருந்திய |
அமரர் பதி |
- |
தேவேந்திரன் |
மிக்கு வெகுண்டு வா |
- |
மிகவும் கோபித்துவா (அதனால்) |
காளம் |
- |
கறுத்த |
நில் |
- |
சிறந்த |
மேகம் அவை |
- |
மேகங்களானவை |
கல்லொடு |
- |
கல்லோடு கூடின |
கார்பொழிய |
- |
வர்ஷத்தைச் சொரிய |
கருதி |
- |
(‘இம்மலையே உங்களுக்கு ரக்ஷகம் இச் சோற்றை இதுக்கிடுங்கோள் ‘என்று முன்பு இடையர்க்குத் தான் உபதேசித்ததை) நினைத்து |
வரை |
- |
(அந்த) கோவர்த்தநகிரியை |
குடையா |
- |
குடையாகக்கொண்டு |
காலிகள் |
- |
பசுக்களை |
காப்பவனே |
- |
ரக்ஷித்தருளினவனே! |
ஆன |
- |
(இப்படி ரக்ஷிக்கைக் குறுப்பான) ஆண்பிள்ளைத் தனமுடையவனே! |
எனக்கு. . . . . ஆடுக-. |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
*** - “எங்குமுளன்” என்றுசொன்ன ப்ரஹ்லாதனுடைய சொல்லை யதார்த்தமாக்கும் பொருட்டுத் தூணில் நரசிங்க மூர்த்தியாய்த் தோன்றி இரணியன் உடலைப் பிளந்தொழித்தவனே! பசிக் கோபத்தினால் ஏழுநாள் விடாமழை பெய்வித்த இந்திரன் பங்கமடையும்படி கோவர்த்தனமலையைக் குடையாகவெடுத்து ஆய்ப்பாடியைக் காத்தருளினவனே! எனக்கொருகால் செங்கீரையாடியருள்.
மூன்றாமடியில் “கால்பொழிய” “கார்பொழிய” என்பன பாடபேதங்கள். முந்தினபாடத்தில் “காலொடு கல்பொழிய” என்று அந்வயித்து “காற்றோடு கூடிக் கல்மழையைச் சொரிய” என்றுரைக்க. நன்மேகமென்றது எஜமானன் சொற்படி நிடக்கும் நின்மையைக் கருதியென்க.
English Translation
Taking a fierce lion-form you tore into Hiranya’s chest with sharp claws spewing blood, to protect the true devotee, his son. When the angered Indra, king of gods, sent dark clouds that rained hailstones, you held a mountain high to protect the cows. O, Fierce bull of the cowherd clan, my Lord, dance for me just once, dance the Senkirai.