(1521)

ஈடா அரியாய் இரணியனை யூனிடந்த

சேடார் பொழில்சூழ் திருநீர் மலையானை

வாடா மலர்த்துழாய் மாலை முடியானை

நாடோறும் நாடி நறையூரில் கண்டேனே.

 

பதவுரை

ஓடா அரி ஆய்

நாட்டில் நடையாடாத (விலக்ஷணமான) நரஸிம்ஹ ரூபியாகி

இரணியன் ஊனை இடந்த

ஹிரண்யா ஸுரனுடைய உடலைக் கிழித்தொழித்தவனும்

சேடு ஆர் பொழில் சூழ்

இளமைபொருந்திய சோலைகளாலே சூழப்பட்ட

திருநீர்மலை யானை

திருநீர்மலையிலே ஸந்நிதி பண்ணியிருப்பவனும்

வாடா மலர் துழாய் மாலை முடியானை

செவ்விகுன்றாத மலர்களையுடைய திருத்துழாய் மாலையைத் திருமுடியில் அணிந்தள்ளவனுமான எம்பெருமானை

நாள் தோறும் நாடி

நித்தியமும் தேடித்திரிந்து

நறையூரில், கண்டேன்-.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- ஓடா அரி போரில் பின்வாங்காத ஸிம்ஹம் என்றும், நாட்டில் நடையாடாதே அபூர்வமாகத் தோன்றின ஸிம்ஹம் என்று முரைப்ப.

 

English Translation

The Lord came as a man-lion and destroyed Hiranya.  He is the Lord of Tirunimalai surrounded by gorves.  He wears of Tulasi wreath of unfading fragrance.  I have found him in Naraiyur.

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain