(1631)

வானார்மதி பொதியும்சடை மழுவாளியொ டொருபால்,

தானாகிய தலைவன்னவன் அமரர்க்கதி பதியாம்

தேனார்பொழில் தழுவும்சிறு புலியூர்ச்சல சயனத்

தானாயனது, அடியல்லதொன் றறியேனடி யேனே.


பதவுரை

ஒருபால்

-

திருமேனியினொரு பக்கத்தில்

வான் ஆர் மதி பொதியும் சடை

-

ஆகாசத்திலே பொருந்தி யிருக்கிற சந்திரன் அடங்கிய ஜடையை யுடையவனாய்

மழுவாளி யொடு

-

மழுவேந்தியான சிவனோடு கூடி

தான் ஆகிய தலைவன் அவன்

-

தான் என்று சொல்லப்படும் தலைவனாயிருப்பவனும்

அமரர்க்கு அதிபதி ஆம்

-

தேவர்கட்கு இறைவனான இந்திரனும் தானாயிருப்பவனும்,

தேன் ஆர் பொழில் தழுவும்

-

தேன் நிறைந்த சோலைகள் தழுவப்பெற்ற

சிறுபுலியூர்

-

திருச்சிறுபுலியூரிலே

சலசயனத்து

-

சலசயனமென்னும் திருக்கோயிலில் எழுந்தருளியிருப்பவனுமான

ஆன் ஆயனது

-

கோபாலக்ருஷ்ணனுடைய

அடி அல்லது

-

திருவடிகளையன்றி

ஒன்று

-

மற்றொன்றையும்

அடியேன் அறியேன்-

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- சிறு தொண்டர்களிடத்தில் நம்முடைய உபதேசம் பலிப்பது அரிது என்று துணிந்து உபதேசத்தை நிறுத்தித் தமது உறுதியையே இனி வெளியிட்டருளுகிறார்.  நம்முடைய உறுதியை வெளியிட்டுக் கொண்டோமாகில் இது கேட்டு இவர்கள் திருந்தக்கூடும் என்று நினைத்து அருளிச் செய்கிறாராகவுமாம், “ஏறாளுமிறையோன் திசைமுகனுந் திருமகளுங், கூறாளுந்தனியுடம்பன்”  என்கிறபடியே சிவனுக்குத் தன் திருமேனியிலே ஒரு கூறு கொடுத்திருப்பவனும் தேவேந்திரனுக்கு அந்தர்யாமியாயிருந்து ஸ்வர்க்க லோகத்தை யாள்பவனுமான சிறுபுலியூர்ச் சலசயனப் பெருமானது திருவடிகளையன்றி மற்றொன்று மறிகின்றிலே னென்றாராயிற்று.

மழுவாளி யென்ற விடத்துப் பெரியவச்சான் பிள்ளை வியாக்யானம் :– “தமப்பன் பிறரென்று பாராதே கொல்லுகைக்குப் பரிகாரமான மழுவையுடைய ருத்ரன்.”

 

English Translation

With the crescent Moon-bearing Siva on one side, the self-made Indra on the other, the Lord of gods resides besides nectared groves in Sirupuliyur Salasayanam.  He is the cowherd Lord krishna.  Other than his lotus feet, I know of no refuge.

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain