(1632)

நந்தாநெடு நரகத்திடை நணுகாவகை, நாளும்

எந்தாயென இமையோர்தொழு தேத்தும்மிடம், எறிநீர்ச்

செந்தாமரை மலரும்சிறு புலியூர்ச்சல சயனத்து

அந்தாமரை யடியாய்.உன தடியேற்கருள் புரியே.

 

பதவுரை

இமையோர்

-

தேவர்கள்

நாளும்

-

நாள்தோறும்

எந்தாய் என

-

எம்பெருமானே! என்று சொல்லி

தொழுது

-

அடிபணிந்து

ஏத்தும்

-

துதிக்கப்பெற்ற

இடம்

-

திவ்யதேசமாய்

எறி நீர் செந்தாமரை மலரும் சிறுபுலியூர்

-

அலைமோதும் நீர் நிலைகளிலே செந்தாமரைப் பூக்கள் மலரப்பெற்றதான சிறுபுலியூரிலுள்ளதான

சலசயனத்து

-

சலசயனக்கோயிலிலே (எழுந்தருளியிருக்கிற)

அம் தாமரை அடியாய்

-

அழகிய தாமரைப் பூப்போன்ற திருவடிகளை யுடையவனே!

நந்தா நெடு நரகத்திடை

-

அழிவில்லாத பெரிய நரகத்திலே

நணுகாவகை

-

(நான்) சேராதபடி

உனது அடியேற்கு அருள் புரி

-

உன் அடியானான என் திறத்தில் க்ருபை பண்ணவேணும்,

 

English Translation

Gods in hordes everyday offer worship in Sirupuliyur Salasayanam were lotus grows in thickets.  O Lord of lotus feet!  Pray ensure that this devotee of yours does not enter eternal Hell.

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain