(1634)

சேயோங்குதண் திருமாலிருஞ் சோலைமலை யுறையும் மாயா,எனக்

குரையாயிது மறைநான்கினு ளாயோ,

தீயோம்புகை மறையோர்ச்சிறு புலியூர்ச்சல சயனத்

தாயோ,உன தடியார்மனத் தாயோவறி யேனே.

 

பதவுரை

சேய் ஓங்கு

-

மிகவும் உயர்ந்ததாய்

தண்

-

குளிர்ந்ததான

திருமாலிருஞ் சோலைமலை

-

திருமாலிருஞ்சோலை மலையிலே

உறையும்

-

நித்யவாஸஞ்செய்கிற

மாயா

-

ஆச்சரியனே!  (நீ)

மறை நான்கினுளாயோ

-

நால் வேதங்களினுள்ளே இருக்கின்றாயோ?

தீ ஓம்பு

-

ஹோமத்தீயை வளர்க்கின்ற

கை

-

கையையுடையரான

மறையோர்

-

வைதிகர்கள் வாழ்கின்ற

சிறு புலியூர் சலசயனத் தாயோ

-

சிறுபுலியூரில் சலசயனக் கோயிலுள்ளாயோ?

உனது அடியார் மனத் தாயோ

-

உனது அன்பர்களின் நெஞ்சிலுள்ளாயோ?

அறியேன்

-

அறிகின்றிலேன்;

எனக்கு இது உரையாய்

-

எனக்கு இதை(த் தெரிய) அருளிச் செய்யவேணும்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- ஆழ்வார் தமக்குண்டான ஒரு ஸந்தேஹத்தை விண்ணப்பஞ் செய்கிறார்.  திருமாலே! நீ வேதங்களிலிருக்கின்றாயா? சிறுபுலியூர்ச் சலசயனக் கோயிலில் இருக்கின்றாயா? அன்பர்தம் உள்ளத்திலிருக்கின்றாயா? இன்னவிடத்திலிருக்கின்றாயென்று தெரியவில்லை; அடியேனக்குச் தெரியவருளிச் செய்யவேணுமென்கிறார்.

சிறுபுலியூர் விஷயமான இத்திருமொழியில் இத்தலத்துப் பெருமானை விளிக்கவேண்டியிருக்க ‘திருமாலிருஞ்சோலைமலையுறையும் மாயா!’ என்று அழகரை விளித்தது என்னொவெனில்; நால்வேதங்கள், சிறுபுலியூர்ச் சலசயனம், அடியார் மனம் என்னுமிடங்களில் எல்லாமுள்ள எம்பெருமான் ஒருவனே என்று உண்மையை விளக்குதல் இப்பாட்டின் உள்ளறையாதலால் திருமாலிருஞ்சோலைமலையில் உறைபவனும் இவனே யென்பது விளியினால் பெறப்படும்.

எம்பெருமானே! வேதமும் வைதிகருடைய ஹ்ருதயமும் உனக்கு இருப்பிடமென்று சாஸ்த்ரங்களிலே கேட்கலாயிருந்தாலும் இப்போது ப்ரத்யக்ஷத்தில் சிறுபுலியூர்ச் சலசயனத்திலிருப்புத்தான் காணலாயிருக்கின்றது; ஆகிலும் ப்ரத்யக்ஷப்ரமாணத்தையே ப்ரதாநமாகக் கொண்டு சாஸ்தரப்மாணங்களை உபமர்த்திக்கும் படியான ஸாஹஸம் அடியேனுக்கு இல்லாமையால் உன் இருப்பிடம் இன்னதென்று மிடத்தை நீயே சோதிவாய் திறந்து அருளிச் செய்தருளா யென்கிறார் என்று சிலர் நிர்வஹிப்பர்கள்.

இவ்விடத்துப் பெரியவாச்சான் பிள்ளை வியாக்கியானம்- “இத்தால் சொல்லிற்றாய்த்து – ஸௌபரி பல வடிவுகொண்டாப்போலே இவ்வோ விடங்கள் தோறும் இனி அவ்வருகில்லை யென்னும்படி குறையற வர்த்திக்கிறபடியைக் காட்டிக்கொடுத்தான்.” என்பதாம்.  சாஸ்த்ரங்களைக்கொண்டே அறிய வேண்டிய அப்ராக்ருத திவ்யமங்கள விக்ரஹங்களையும், கண்ணால் கண்டு அநுபவிக்கலாம்படியான அர்ச்சாரூபங்களையும், நெஞ்சாலே அநுபவிக்கலாம்படி அந்தர்யாமியாயிருக்கும் வடிவுகளையும் ஒருகாலே ஸேவை ஸாதிப்பித்த படியாலே கண்டு ஆச்சரியப்படுகிறாரென்றவாறு.

இப்பாசுரத்தைச் சிறுபான்மை அடியொற்றி ஆழ்வான் வரதராஜஸ்தவத்தில்   என்றருளிச்செய்த ச்லோகம் இங்கு ஸமரிக்கத்தகும்.

எம்பெருமான் நால் வேதங்களுக்கும் ப்ரதிபாத்ய வஸ்துவாயிருப்பதே மறை நான்கினுள்ளானாகை.

 

English Translation

O wonder-Lord of cool Tirumalirum-solai! Pray tell me this.  Do you reside in the chants of the four Vedas?  Or in Sirupuliyur Salasayanam where Vedic seers perform fire sacrifice?  Or in the hearts of your devotees?  Which, I do not know.

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain