(1608)

திருவுக் கும்திரு வாகிய செல்வா தெய்வத் துக்கர சேசெய்ய கண்ணா,

உருவச் செஞ்சுட ராழிவல் லானே உலகுண் டவொரு வா.திரு மார்பா,

ஒருவற் காற்றியுய் யும்வகை யென்றால் உடனின் றைவரென் னுள்புகுந்து, ஒழியா

தருவித் தின்றிட அஞ்சிநின் னடைந்தேன் அழுந்தூர் மேல்திசை நின்றவம் மானே.

 

பதவுரை

திருவுக்கும திரு ஆகிய செல்வா

-

ஸ்ரீ மஹாலக்ஷிமிக்கும் லக்ஷ்மீகரனான செல்வனே!

தெய்வத்துக்கு அரசே

-

நித்யஸூரிகட்குத் தலைவனே!

செய்ய கண்ணா

-

புண்டரீகாக்ஷனே!

உருவம் செம் சுடர் ஆழி வல்லானே

-

அழகிய வழிவை யுடைத்தாய் செவ்விய சுடர்மயனான திருவாழியை (ப்ரயோகித்தலில்) ஸமர்த்தனே!

உலகு உண்ட ஒருவா

-

(பிரளயத்தில்) உலகங்களை யமுதுசெய்த அத்விதீயனே!

திரு மார்பா

-

பிராட்டியைத் திருமார்பிலுடையவனே!

அழுந்தூர்

-

திருவழுந்தூரில்

மேல் திசை நின்ற அம்மானே

-

மேலைத்திசையில் எழுந்தருளியிருக்கும் பெருமானே!,

ஒருவற்கு ஆற்றி உய்யும் வகை அன்று

-

ஒரு இந்திரியத்துக்குத் தப்பிப் பிழைக்கும் வழி இல்லை;

ஆல்

-

அந்தோ! ;

ஐவர்

-

ஐந்து இந்திரியங்கள்

உடன் நின்று

-

நெருங்கியிருந்து

என்னுள் புகுந்து

-

என் பக்கலிலே வந்து புகுந்து

ஒழியாது

-

ஓயாமல் (எப்போதும்)

அருவி

-

அலைத்து

தின்றிட

-

நெருக்க

அஞ்சி

-

(அதற்கு) அஞ்சி

நின்

-

உன்னைச் சரணம்

அடைந்தேன்

-

புகுந்தேன்

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- முன்னடிகளில் எம்பெருமானுடைய பெருமைகளைச சொல்லியேத்தி, இப்பபட்ட நீ அடியேனைப் பஞ்சமஹா பாதகர் கையிலே காட்டிக் கொடுத்துக் கொலை செய்விக்கை தகுதியோ? பிரானே! உன்னைச் சரணம் புகுகின்றேன், கிருபை செய்தருளாய் என்கிறார் பின்னடிகளில்.

திருவுக்கும் திருவாகிய செல்வா! எம்பெருமான் ஸ்ரீக்கும் ஸ்ரீயாயிருப்பனென்றால் என்ன கருத்தென்னில்; ஸ்ரீ என்றாலும் திரு என்றாலும் ‘அதிசயத்தை விளைவிப்பவள்’ என்று பொருள் கொள்ளத்தக்கது; எல்லார்க்கும் அதிசயத்தை விளைப்பவளான அவள் தனக்கும் அதிசயத்தை விளைப்பவன் எம்பெருமான் என்றவாறு.  இவ்வருளிச் செயலை அடியொற்றியே ஆளவந்தார் ஸ்தோத்ர ரத்நத்தில் ??????????? என்றும், ஆழ்வான் ஸ்ரீவைகுண்ட ஸ்தவத்தில் ????????????????/  என்றும், பட்டர் ஸ்ரீகுணரத்ந கோசத்தில் ?????????? என்று மருளிச் செய்தது.  பிராட்டிக்கு எம்பெருமானுடைய ஸம்பந்தத்தினால் அதிசயம்; எம்பெருமானுக்குப் பிராட்டியின் ஸம்பந்தத்தினால் அதிசயம் என்றுணர்க.  பிராட்டிக்கு எம்பருமானுடைய ஸம்பந்தத்தினால் அதிசயம் என்பதற்கு மேலுதாஹரிக்கப்பட்ட ஸ்ரீ ஸூக்திகள் ப்ரமாணம்; எம்பெருமானுக்கு  பிராட்டியின் ஸம்பந்தத்தினால் அதிசயம் என்பதற்கு. ???????????  என்னும் ஸ்ரீராமாயண வசநம் ப்ராமாணம்.

தெய்வத்துக்கு அரசே தெய்வமென்றது ஜாத்யேக வசநம்; தெய்வங்கட்குஎன்றபடி; அயர்வறுமமரர்க ளதிபதியே என்கை.

(ஒருவற்கு இத்யாதி.) பஞ்சேந்திரியங்களில் தனித்தனி ஒவ்வொரு இந்திரியத்திற்கே ஆடல் கொடுப்பது அரிது; அப்படியிருக்க ஐந்து இந்திரியங்களையும் உடனிருத்தினால், அவை தாம் ‘எனக்கு வேண்டிய விஷயத்தைக் காட்டு, எனக்கு வேண்டிய விஷயத்தைக் காட்டு’ என்று மூலையடியே இழுத்துக் கொலை செய்தால் நான் எங்ஙனே வாழ்வது? இவை இன்னமும் என்னை எவ்வாறு நலியத் தேடுகின்றனவோவென்று சாலவும் அஞ்சி, அஞ்சினார்க்குப் புகலிடமான உன் திருவடிகளை வந்து பற்றினேன்; நீயோ தெய்வத்துக்கரசு;­- இந்திரியங்களுக்கு வசப்படாத ஒரு நாட்டை ஆள்பவன்; என்னையும் அந்தநாட்டிலே புகுவிக்க வல்லையல்லையோ? செஞ்சுடராழி வல்லானான நீ இவ்வைவர் மேல் ஆழி விடுத்துக் காரியஞ் செய்ய மாட்டிற்றிலையோ? அன்றொருகால் உலகுண்டு நோக்னாயென்று ஏட்டுப் புறத்திலே கேட்டுப் போகாமே இன்று என்னைக் காத்தருள்வாய்.  திருமார்பனான நீ அத்திருவின் பரிகாரமான அடியேனுக்கு இத்தனை யருள் செய்கை மிகையோ என்றாராயிற்று.

மூன்றாமடியில் “உய்யும் வகை யென்றால்” என்றே எங்கும் பாடம் வழங்கி வருகின்றது; இப்பாடத்திற்கு ஒரு பொருளும் சொல்லப் போகாது; வியாக்கியானத்திற்கும் இணங்காது : “ஒருவற்கு ஆடல் கொடுத்து உஜ்ஜீவிக்கும் படியாயிருக்கிறதில்லை” என்பது பெரியவாச்சான் பிள்ளை ஸ்ரீஸூக்தி.  ஆகவே, “ஒருவற்காற்றி உய்யும் வகை அன்றால்” என்னும் பாடமே பொருந்தத் தக்கது என்று அழகிய மணவாளச்சீய ரருளிச் செய்யும்படி.  ‘அன்று ஆல்’ என்று பிரிக்க : ஆல் – ஐயோ வென்றபடி.

ஐவர் – அஃறிணையான பஞ்சேந்திரியங்கைள ‘ஐவர்’ என்று உயர்த்திக் கூறியது, அவற்றின் மேல் தமக்குள்ள சீற்றமிகுதியையும், அவற்றின் கொடுமைக் கனத்தையும் காட்டுதற்கென்க : திணைவழுவமைதி.

 

English Translation

Wealth of the wealth-lady, wealth-laden-cloud hued, eyes like the lotus and king of the gods, O! Beautiful radiant discus wielder! swallower of the worlds, Bearer of Sri! when even one sense is hard to fulfill, five of them have entered all of the same time! not able to bear their pressure I came to you Lord-in-residence in Wester-Alundur!

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain