(1609)

பந்தார் மெல்விரல் நல்வளைத் தோளி பாவை பூமகள் தன்னொடு முடனே

வந்தாய்,என்மனத் தேமன்னி நின்றாய் மால்வண்ணா மழை போலொளி வண்ணா,

சந்தோகா பௌழியா தைத்திரியா சாம வேதியனே நெடு மாலே,

அந்தோ  நின்னடி யன்றிமற் றறியேன் அழுந்தூர் மேல்திசை நின்றவம் மானே.

 

பதவுரை

பந்து ஆர் மெல் விரல்

-

பந்து பொருந்திய மெல்லிய கைவரல்களை யுடையளும்

நல் வளை தோளி

-

நல்ல வளைகளையணிந்த தோள்களை யுடையளும்

பாவை

-

பதுமை போன்றவளுமான

பூ மகள் தன்னோடும் உடனே வந்தாய்

-

பெரிய பிராட்டியாரோடு கூட எழுந்தருளினவனாய்

என் மனத்தே மன்னி நின்றாய்

-

என் நெஞ்சிலே பொருந்தி யெழுந்தருளியிருக்கு மவனே!

மால் வண்ணா

-

கருத்த நிறத்தை யுடையவனே!

மழை போல் ஒளி வண்ணா

-

மேகம் போன்று குளிர்ந்து அழகிய வடிவையுடையவனே!

சந்தோகா

-

சாந்தோக்ய உபநிஷத்தை உணர்ந்தவனே!

பௌழியா

-

கௌஷீதகீப்ராஹ்மண முணர்ந்தவனே

தைத்திரியா

-

தைத்திரீய உபநிஷத்தை உணர்ந்தவனே!

சாம வேதியனே

-

ஸாமவேத முணர்ந்தவனே!

நெடுமாலே

-

ஸர்வஸ்மாத்பரனே!

அழுந்தூர் மேல் திசை நின்ற வம்மானே!- ;

நின் அடி அன்றி

-

உனது திருவடிகளையன்றி

மற்று அறியேன்

-

வேறொரு புகல் அறிகிறேனில்லை.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- 1.“அரவத் தமளியினோடு மழகிய பாற்கடலோடும், அரவிந்தப் பாவயுந்தானு மகம்படி வந்து புகுந்து... பள்ளிகொள்கின்ற பிரானை” என்னுமா போலே பிராட்டியையும் உடனழைத்துக் கொண்டுவந்து அடியேனுடைய மனத்திலே மன்னி நிற்பவனே!, ஆர்த்தர்களை ரக்ஷிக்கைக்குப் பாங்கான ஸர்வஜ்ஞத்வத்தை யுடையவனே!, ஸர்வஸ்மாத்பரனே! அடியேன் உன்னுடைய திருவடிகளன்றி வேறொரு புகலிருப்பதாகக் கனவிலும் கருதுகின்றிலேன்; அடியேன் போல்வாரைக் காத்தருள்வதற்கென்றே திருவழுந்தூரில் நித்ய ஸந்நிதி பண்ணியிருக்கின்ற வுனக்கு, பஞ்சேந்திரியங்களின் கையிலே படுகொலைப் படாதபடி என்னைக் காத்தருள்கை  மிகையன்றுகாண் என்றாராயிற்று.

“பந்தார் மெல்விரல்” என்ற அடைமொழி மடந்தையர்க்கு இயற்கையாக இடுவதாம்.  சேலைகள் ஆபரணங்கள் முதலியவற்றை வருணித்துச் சொல்லுவதுபோல விளையாட்டுக் கருவிகளையிட்டு விசேஷிப்பதும் கவிமரபு.

 

English Translation

Ball-clasping fingers and well-bangled fore-arms lotus-dame Lakshmi residing beside you, you came and took my heart for residence adorable cloud-hued radiant Lord! Substance of Chandogya-Aranyaka-taittiriya-Sama Vedas, timeless! woe is me, I know not another refuge, Lord-in-residence in Western-Alundur!

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain