(1610)

நெய்யா ராழியும் சங்கமு மேந்தும் நீண்ட தோளுடை யாய்,அடி யேனைச்

செய்யா தவுல கத்திடைச் செய்தாய் சிறுமைக் கும்பெரு மைக்குமுள் புகுந்து,

பொய்யா லைவரென் மெய்குடி யேறிப் போற்றி வாழ்வதற் கஞ்சிநின் னடைந்தேன்

ஐயா நின்னடி யன்றிமற் றறியேன் அழுந்தூர் மேல்திசை நின்றவம் மானே.

 

பதவுரை

ஐயா

-

ஸ்வாமீ!

அழுந்தூர் மேல்திசை நின்ற அம்மானே!- ;

நெய் ஆர் ஆழியும்

-

நெய்யிட்டிருக்கிற சக்கரத்தையும்

சங்கமும்

-

ஸ்ரீபாஞ்சஜந்யத்தையும்

ஏந்தும்

-

தரித்திருக்கின்ற

நீண்ட தோள் உடையாய்

-

பெரிய திருக்கைகளை யுடையவனே!

அடியேனை

-

உனக்கே உரியவனான என்திறத்தில்

உலகத்திடை

-

இவ்வுலகத்திலே

செய்யாத செய்தாய்

-

செய்யத்தகாதவற்றை யெல்லாம் செய்தாய்;

ஐவர்

-

பஞ்சேந்திரியங்கள்

பொய்யால்

-

க்ருத்ரிமத்தோடு கூடி

சிறுமைக்கும் பெருமைக்கும் உள் புகுந்து

-

சிற்றின்ப வாழ்வுக்கும் பேரின்ப வாழ்வுக்கும் பொதுவாக என்னுள்ளே புகுந்து

என் மெய் குடி ஏறி

-

என் சரீரத்திலே குடியேறியிருக்க

போற்றி வாழ்வதற்கு அஞ்சி

-

அவற்றை த்ரப்தியடையச் செய்து வாழ்வதற்குப் பயப்பட்டு.

நின் அடைந்தேன்-;

நின் அடி அன்றி மற்று அறியேன்-

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- ‘இந்திரியங்களுடன் வைத்ததால் என்ன கெடுதி? நல்லகதைகளைக் கேட்கச் செவி வேண்டாவோ? நல்ல துதிகளை வாயாரச் சொல்ல வாய் வேண்டாவோ? ; “கண்டோங் கண்டோங் கண்டோங் கண்ணுக் கினியன கண்டோம்” என்று காண்பதற்குக் கண் வேண்டாவோ?, திவ்ய தேசங்களுக்கு நடந்து செல்லக் கரண களேபரங்கள் வேண்டாவோ? இவை யெல்லாம் நன்மைக்கு வேணுமென்று தானே உமக்கு இந்திரியங்களைத் தந்தது; ???????????????? என்றது அறியீரோ?” என்று எம்பெருமான் திருவுள்ளமாக, அதற்கு மறுமொழியாகக் கூறுகின்றார் சிறுமைக்கும் பெருமைக்கும் முள்புகுந்தென்று தொடங்கி.  இந்திரியங்களோ வென்னில், சிற்றின்பத்தைப் பெறுத்துதற்கும் பேரின்பத்தைப் பெறுத்துதற்கும் பொதுவாயிரா நின்றன; (சிறுமைக்கும் பெருமைக்குமுள் புகு் என்றதன் உட்கருத்து இது.) இப்படிப்பட்ட இந்திரியங்கள்  நல்லெண்ணமின்றியே வஞ்சகத்தோடு என்னுட் புகுந்திருப்பதனால், அவை இழுத்துக்கொண்டு போகும் வழிகளிலெல்லாஞ் சென்று அவற்றுக்கு வேண்டிய இரைகளைத் தந்து ஆராதிப்பதற்கு அடியேன் அசக்த னாதலால்  அவற்றால் நலிவுபடா நின்றேன்; அந்நலிவு தீர உன்னை வந்து சரணம் புகுந்தேனென்றாராயிற்று.

குடியேறி = ஏறி – எச்சத்திரிபு.

 

English Translation

Bearer of sharp discus and a white conch, Lord with four mountain-like long mighty arms! You gave me more than what you gave the world, making me experience small things and big things.  Discreetly five senses entered my person, I dare not subserve them, I cam to you feet. O Lord I know not another refuge, Lord-in-residence in Western-Alundur!

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain