(1611)

பரனே பஞ்சவன் பௌழியன் சோழன் பார்மன் னர்மன்னர் தாம்பணிந் தேத்தும்

வரனே,மாதவ னே மது சூதா  மற்றோர் நல்துணை நின்னலா லிலேன்காண்

நரனே நாரண னே.திரு நறையூர் நம்பீ எம்பெரு மான்.உம்ப ராளும் அரனே,

ஆதிவ ராகமுன் னானாய் அழுந்தூர் மேல்திசை நின்றவம் மானே.


பதவுரை

பரனே

-

பரமபுருஷனே!

பஞ்சவன் பூழியன் சோழன்

-

பஞ்சவனென்றும் பூழியனென்றும் சோழனென்றும் பெயர் கொண்ட

பார் மன்னர் மன்னர் தாம்

-

பூமிக்கு ராஜாதி ராஜர் களானவர்கள்

பணிந்து ஏத்தும்

-

பணிந்து துதிக்கும் படியான

வரனே

-

சிறந்தவனே!

மாதவனே

-

திருமாலே!

மதுசூதா

-

மதுவென்னு மசுரனைக் கொன்றவனே!

நரனே நாரணனே

-

நரநாராயணாவதாரம் செய்தருளினவனே!

திரு நறையூர் நம்பீ

-

திருநறையூரி லெழுந்தருளி யிருக்கின்ற பரிபூர்ணனே!

எம் பெருமான்

-

எமக்குத் தலைவனே!

உம்பர் ஆளும் அரனே

-

தேவதைகளை ஆளவல்ல ருத்ரனுக்கு ஆந்தர்யா மியானவனே!

முன்

-

முன்பொருகாலத்தில்

ஆதி வராகம் ஆனாய்

-

ஆதிவராஹ மூர்த்தியாய் அவதரித்தவனே!

அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே!-

நின் அலால்

-

உன்னையொழிய

மற்று ஓர் நல்துணை

-

வேறொரு நல்ல ரக்ஷகனை

இலேன்

-

உடையேனல்லேன்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- ஒத்தாது மிக்காரை யுடையனாகாதவனே !, பஞ்சவ னென்றும் பௌழிய னென்றும் சோழனென்றும் சொல்லப்படுகிற ராஜாதி ராஜர்கள் பணிந்தேத்தும் படியாக வுள்ளவனே!, திருமாலே, வேதவிளக்கைக் கொள்ளை கொண்டு உலகமெங்கு மிருள்மூடச் செய்த மதுகைபடர்களைக் கொன்றொழித்தவனே!, ஸ்ரீ பதரிகாச்ரமத்தில் நரனென்னுஞ் சிஷ்யனாகவும் நாராயணனென்னும் ஆசார்யனாகவும் வடிவெடுத்து ஆசார்ய சிஷயக்ரமத்தை யுணர்த்தித் திருமந்திரத்தை வெளியிட்டருளினவனே! உன்னையன்றி மற்றொரு நற்றுணையுடையேனல்லே னென்கிறார்.

முதலடியில் ‘மன்னர் மன்னர்’ என்றது – மன்னர்க்கும் மன்னர் என்றபடி பரன், வரன் – வடசொற்கள்.

 

English Translation

Chola Kings Panchavan, Pouliyan, Cholan, rulers of kings on Earth worship you here. Excellent Madava, Madhusudana, other than you there is no refuge, see! Lord who was Nara-Narayana then, Lord who is Tiru-narayiur resident! Lord who is Siva and Adi-varaha, Lord-in-residence in Western-Alundur!

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain