(1612)

விண்டான் விண்புக வெஞ்சமத் தரியாய்ப் பரியோன் மார்வகம் பற்றிப் பிளந்து,

பண்டான் உய்யவோர் மால்வரை யேந்தும் பண்பா ளா பர னே பவித் திரனே,

கண்டேன் நான்கலி யுகத்ததன் தன்மை கரும மாவது மென்றனக் கறிந்தேன்,

அண்டா. நின்னடி யன்றிமற் றறியேன் அழுந்தூர் மேல்திசை நின்றவம் மானே.

 

பதவுரை

விண்டான்

-

பகைவனான இரணியன்

விண் புக

-

வீரஸ்வர்க்கம் சென்று சேரும்படி

வெம் சமத்து

-

வெவ்விய போர்க்களத்திலே

அரி ஆய்

-

நரசிங்கமாய்த் தோன்றி

பரியோன்

-

பருத்தவடிவையுடையனான அவ்விரணியனுடைய

மார்வகம்

-

மார்பை

பற்றி பிளந்து

-

பிடித்துக் கிழித்தவனாயும்,

பண்டு

-

முன்பு (க்ருஷ்ணாவதாரத்தில்)

ஆன் உய்ய

-

பசுக்கள் ஜீவிக்கும்படி

ஓர் மால் வரை -  ஓர் மால் வரை

-

ஒரு பெரிய மலையை

ஏந்தும்

-

எடுத்துப்பிடித்த

பண்பாளா

-

நீர்மையுடையவனே!

பரனே

-

சிறந்தவனே!

பவித்திரனே

-

பரிசுத்தனே!

அண்டா

-

அண்டங்கட்கு இறைவனே!

அழுந்தூர் மேல்திசை நின்ற அம்மானே!- ;

கலியுகத்த தன் தன்மை

-

இக்கலியுகத்தின் ஸ்வபாவத்தை

நான் கண்டேன்

-

நான் தெரிந்து கொண்டேன்;

என் தனக்கு

-

எனக்கு

கருமம் ஆவதும்

-

செய்யத்க்கதையும்;

அறிந்தேன்

-

அறிந்து கொண்டேன்;

நின் அடி அன்றி மற்று அறியேன்-.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- விண்டான் – தன்னை விட்டு நீங்கினவன் என்று பொருள் பட்டுப் பகைவனை உணர்த்தும் சொல் இது.  அமர்க்களத்தில் மாண்டொழிந்தவர்கள் வீரஸ்வர்க்கம் புகுவர்களென்பது நூற்கொள்கை யாதலால் ‘விண்புக’ எனப்பட்டது.

கண்டேன் நான் கலியுகத்ததன் தன்மை – மஹாபாரதத்தில் மேக்ஷதர்மத்தில் -?????????????? என்று சொல்லியிருக்கிறபடியே தலைகீழாக நடக்குங் கலியுகத் தன்மைகளைக் கண்டு கொண்டேன்; இப்படிப்பட்ட நிலைமையில் நமக்குச் செய்யத்தக்கதேது என்று ஆராய்ந்து பார்த்தவளவில் உன் திருவடிகளை ஆச்ரயிப்பதே கருமம் என்று துணிந்து கொண்டேன்; அத்துணிவுக்கீடாக உனது திருவடிகளை யன்றி வேறொன்றையு மறியாதவனா யிருக்கின்றே னென்றாராயிற்று.

விண்டான், பரியோன் சொற்கள் இரணியனைக் குறிப்பன.

கலியுகத்ததன் தன்மை கண்டேன் = பகவத் விஷயத்தில் வெறுப்பைப் பிறப்பித்து ஆத்மஹாநியை விளைப்பதே இக்கலியுகத்தின் தன்மையென்று தெரிந்து கொண்டேனென்க. கருமம் - வடசொல்; அண்டா = அண்டங்கட்கு அதிபதியே! என்றும், இடையனாகப் பிறந்தவனே! என்றும் பொருள்படும்.

 

English Translation

O Lord you came as a half-beast and half-man, tore into mighty chest of Hirayana! You raised a mountain to protect the cows, Merciful, Benevolent and Holy! I know the face of the kali age now i also know what is the fit thing for me.  Other than your feet I know not where to go Lord-in-residence in Western-Alundur!

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain