(1614)

கறுத்துக் கஞ்சனை யஞ்ச முனிந்தாய் கார்வண் ணா கடல் போல் ஒளி வண்ணா

இறுத்திட் டான்விடை யேழும்முன் வென்றாய் எந்தாய். அந்தர மேழுமு னானாய்,

பொறுத்துக் கொண்டிருந் தால்பொறுக் கொணாப் போக மேநுகர் வான்புகுந்து, ஐவர்

அறுத்துத் தின்றிட வஞ்சிநின் னடைந்தேன் அழுந்தூர் மேல்திசை நின்றவம் மானே.

 

பதவுரை

கஞ்சனை அஞ்ச கறுத்து முனிந்தாய்

-

கம்ஸனை அவன் பயப்படும்படி கோபித்து நிரஸித்தவனே!

கார் வண்ணா

-

மேகம் போல் குளிர்ந்த வடிவையுடையவனே!

கடல் போல் ஒளி வண்ணா

-

கடல் போன்று அழகிய வடிவையுடையவனே!

முன்

-

முன்பொருகால்

ஆன் விடை ஏழும் இறுத்திட்டு வென்றாய்

-

ஏழு எருதுகளையும் முறித்துவென்றவனே!

எந்தாய்

-

எம்பெருமானே!

முன்

-

முற்காலமே தொடங்கி

அந்தரம் ஏழும் ஆனாய்

-

மேலுலகங்களேழுக்கும் நியாமகனானவனே!,

அழுந்தூர் மேல்திசை நின்ற அம்மானே!- ;

பொறுத்துக் கொண்டு இருந்தால் பொறுக்க ஒணா

-

வருந்தி ஸஹித்துக் கொண்டிருப்போமென்றாலும் ஸஹிக்க முடியதாபடியான

போகமே நுகர்வான் ஐவர் புகந்து

-

துக்கானுபவங்களையே பெறுவிப்பதற்காகப் பஞ்சேந்திரியங்கள் என்னிடம் வந்து சேர்ந்து

அறுத்து தின்றிட

-

ஹிம்ஸித்து ஆத்ம நாசத்தைப் பண்ண

அஞ்சி

-

அதற்குப் பயப்பட்டு

நின் அடைந்தேன்

-

உன்னை ஆச்ரயித்தேன்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- உன் பக்கலில் நல்லெண்ணங் கொண்டு வாழ்ந்து போகலாமாயிருக்க அது செய்யாதே தீய புத்தியைக் கொண்ட கம்ஸன் அஞ்சி யொழியும்படி அவனைச் சினந்து நிக்ரஹித்தவனே; நப்பின்னைப் பிராட்டியோடு கலவிசெய்ய இடையூறாயிருந்த ஏழு விருஷபங்களையும் வலியடக்கி அப்பிராட்டியைத் தழுவிக் கொண்டவனே!, பூலோகம் புவர் லோகம் ஸுவர்லோகம் மஹோலோகம் ஜநலோகம் தபோலோகம் ஸத்யலோகம் ஆகிய மேலேழுலகங்களையும் நிர்வஹித்து நடத்துமவனே! பல்லைக்கடித்துக் கொண்டு பொறுத்திருப்போ மென்றாலும் பொறுத்திருக்க முடியாத துக்காநுபவங்களை நான் அடைந்திடும்படி பஞ்சேந்திரியங்கள் என்னுள்புகுந்து ஹிம்ஸிக்க, அந்த ஹிம்ஸைகளுக்கு அஞ்சி உன் திருவடிகளிலே வந்து புகுந்தே னென்றாராயிற்று.

போகம் – மென்ற வடசொல்விகாரம்; அநுபவம்; துன்பங்களின் அநுபவமென்பது அர்த்தாத் ஸித்தம்.  நுகர்வான் – நான் அநுபவிக்கும்படி செய்தவதற்காக.

 

English Translation

O Dark-hued Lord!  O Radiant ocean-hued Lord!  You struck fear and anger in Kamsa's heart!  You destroyed seven bulls in a contest!  You become the seven worlds in the yore!  I fear the unbearable miseries the five senses heap upon me. O Lord of western Alundur, my Master, I have attained your feet.

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain