(1617)

அன்ன மன்னுபைம் பூம்பொழில் சூழ்ந்த அழுந்தூர் மேல்திசை நின்றவம் மானை,

கன்னி மன்னுதிண் டோள்கலி கன்றி ஆலி நாடன்மங் கைக்குல வேந்தன்,

சொன்ன இன்தமிழ் நன்மணிக் கோவை தூய மாலை யிவைபத்தும் வல்லார்,

மன்னி மன்னவ ராயுல காண்டு மான வெண்குடைக் கீழ்மகிழ் வாரே.

 

பதவுரை

அன்னம் மன்னு

-

அன்னப்பறவைகள் பொருந்திவாழ்கிற

பை பூ பொழில் சூழ்ந்த

-

பரந்த பூஞ்சோலைகளாற் சூழப்பட்ட

அழுந்தூர்

-

திருவழுந்தூரில்

மேல் திசை நின்ற

-

மேலைத்திக்கில் எழுந்தருளியிருக்கின்ற

அம்மானை

-

எம்பெருமானைக்குறித்து,-

கன்னி மன்னு திண் தோள்

-

ஒரு நாளு மழியாத மிடுக்கை யுடைய தோள்களை யுடையராய்

ஆலி நாடன்

-

திருவாலிநாட்டுக்குத் தலைவராய்

மங்கை

-

திருமங்கையிலுள்ளார்க்கு

குலம் வேந்தன்

-

குலக்கிரமமக வந்த ராஜாவான

கலிகன்றி

-

ஆழ்வார்

சொன்ன

-

அருளிச்செய்த

இன் தமிழ்

-

மதுரமான தமிழ்ப்பாஷையினாலாகிய!

நல் மணி கோவை

-

நல்ல ரத்னமாலை போலச் சிறந்த

தூய மாலை இவை பத்தும்

-

பரிசுத்தமான இந்தச் சொல்மாலைகள் பத்தையும்

வல்லார்

-

ஓதி யுணருமவர்

மன்னவர் ஆய்

-

பிரபுக்களாய்

மன்னி

-

நெடுநாள் வாழ்ந்து

உலகு ஆண்டு

-

லோகங்களை அரசாட்சி செய்துக்கொண்டு

மானம்

-

பெரிய

பெண் குடை கீழ்

-

வெண்குடை நிழலிலே இருந்து

மகிழ்வர்

-

மகிழப்பெறுவர்.

 

English Translation

These ten pure Tamil gem-like songs strung together as a garland by strong-armed Alinadan, Mangai king Kalikanri  extol the Lord residing in the Western part of Alandur surrounded by swan lakes and fertile groves.  Those who master it will rule as kings and enjoy the white Moon-like parasol on Earth.

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain